விஜய்க்காக நாள் தோறும் அன்னதானம் செய்யும் ரத்த உறவு.. எல்லாம் நல்லதுக்கு தான்!

சென்னை: நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகி, தனது அரசியல் கட்சியில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது கடைசி படமான ஜன நாயகன் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு அதாவது ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படம் தான் அவர் நடிக்கும் கடைசி படம் என்று அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் விஜய் அரசியலுலும் வெல்ல வேண்டும் என்று அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் நாள் தோறும் அன்னதானம் செய்து வருகிறார். இந்த அன்னதானம் நடிகர் விஜய்க்கு சொந்தமான வீடு ஒன்று சாலிகிராமம் பகுதியில் உள்ளது. அந்த வீட்டில் நாள் தோறும் மதியம் அன்னதானம் நடைபெற்று வருகிறது.

விஜய்யை சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் செய்து வைத்து, நடிகராகவும் கதாநாயகனாகவும் மாற்றினார் அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர். விஜய்யின் வாழ்க்கையில் பல முக்கிய இடங்களில் இன்னும் சொல்லப்போனால் பல முக்கிய சந்தர்ப்பங்களில் விஜய்க்கு உறுதுணையாக அவருக்கு முதுகெழும்பாக, தொடர்ந்து இருந்து வருகிறார். இப்படி இருக்கும்போது, விஜய்யின் ரசிகர் மன்றமாக இருந்த விஜய் மக்கள் இயக்கத்தை அரசியலுக்கு அழைத்து வந்ததே அவரது தந்தைதான். அதிமுகவுக்கு கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆதரவு அளிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தவர் எஸ்.ஏ.சி என்று அழைக்கப்படுகிற விஜயின் தந்தைதான்.

Vijay Father SA Chandrasekhar Runs Food Donations For Poor People Daily

அரசியலில் வெற்றி: இப்படி இருக்கும்போது, நடிகர் விஜய் அரசியலில் அதுவும் நேரடியாகவே வாக்கு அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ளாதால், அவருக்கு அரசியலிலும் வெற்றி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாள்தோறும் அன்னதானம் செய்து வருகிறார் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த அன்னதானத்தால் பயன் பெற்று வருகிறார்கள். இந்த தகவலை வலைப்பேச்சு யூடியூப் சேனலைச் சேர்ந்த பத்திரிகையாளர் சக்திவேல் தெரிவித்தார்.

துயரம்: தற்போது இந்த தகவல் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது என்றாலும், கடந்த 28ஆம் தேதி விஜய் கரூரில் நடத்திய பிரச்சாரத்தில் கலந்து கொண்டவர்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை தமிழ்நாட்டிற்கே ஏற்படுத்தி உள்ளது. தன்னைப் பார்க்க வந்த ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இப்படி ஒரு துயரம் ஏற்பட்டுவிட்டதே என்ற துயரம் விஜய்யை ஆட்கொண்டுள்ளது. இந்த மரணங்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகம், இதில் சதி நடந்துள்ளது, கட்டாயம் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்து மனுதாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X