»   »  கேரள ரசிகர்களுக்கு விஜயின் ஸ்பெஷல் ஓணம் விருந்து

கேரள ரசிகர்களுக்கு விஜயின் ஸ்பெஷல் ஓணம் விருந்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் எப்படி நாம் தீபாவளியைக் கொண்டாடுகிறோமோ அதே போன்று கேரளாவில் சீரும் சிறப்புமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாக ஓணம் திகழ்கின்றது.

இந்த ஓணம் பண்டிகைக்கு கேரளாவின் முன்னணி டிவி சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தயாராகி வருகின்றன.

இதில் கேரளாவின் முன்னணி டிவி சேனலான சூர்யா நடிகர் விஜய் நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் புலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஒளிபரப்பவிருக்கின்றது.

விஜயின் மலையாள ரசிகர்கள்

விஜயின் மலையாள ரசிகர்கள்

தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக கேரளாவில் விஜய்க்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். விஜய் நடித்த துப்பாக்கி, ஜில்லா மற்றும் கத்தி போன்ற திரைப்படங்கள் கேரளாவில் நல்ல வசூலை ஈட்டியதில், மலையாள உலகிலும் விஜயின் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

விஜயின் படங்களை சின்னத்திரையில்

விஜயின் படங்களை சின்னத்திரையில்

மேலும் விஜயின் படங்களை மலையாள சின்னத்திரைகளில் ஒளிபரப்பும்போது ஒவ்வொரு முறை படங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

மலையாளம் அல்லாத இசை வெளியீடு

மலையாளம் அல்லாத இசை வெளியீடு

பொதுவாக ஓணம் கொண்டாட்டங்களின் போது மலையாள முன்னணி நடிகர்களின் படம் அல்லது இசை வெளியீடு போன்ற நிகழ்ச்சிகளைத் தான் ஒளிபரப்புவர். ஆனால் முதன்முதலாக ஓணம் கொண்டாட்ட நிகழ்வுகளில் மலையாளம் அல்லாத ஒரு படத்தின் இசை வெளியீடு ஒளிபரப்பாக இருக்கிறது. புலி இசை வெளியீடை சூர்யா டிவி ஓணம் ஸ்பெஷலாக இன்று ஒளிபரப்பவிருக்கிறது.

சமீபத்தில் சன் டிவியில்

சமீபத்தில் சன் டிவியில்

ஆகஸ்ட் மாதம் 2 ம் தேதி புலி படத்தின் இசை வெளியீடு மாமல்லபுரத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.புலி படத்தின் இசை வெளியீட்டு விழாவை சன் டிவி சமீபத்தில் ஒளிபரப்பியது குறிப்பிடத்தக்கது.

தள்ளிப் போன புலி திரைப்படம்

தள்ளிப் போன புலி திரைப்படம்

இந்நிலையில் செப்டம்பர் 17 ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவிருந்த புலி திரைப்படம், விஎப்எக்ஸ் (VFX) பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாததால் அக்டோபர் 1 ம் தேதி காந்தி ஜெயந்தியன்று வெளியாகவிருக்கிறது.

English summary
Puli Audio Launch will be Aired on a popular Malayalam TV channel Surya, for Onam festival on Thursday, 27 August.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil