»   »  முதல் முறையாக விஜய் படத்தில் நான்கு நாயகிகள்!

முதல் முறையாக விஜய் படத்தில் நான்கு நாயகிகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

முதல் முறையாக விஜய் படத்தில் நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். அவர்கள் ஸ்ருதிஹாஸன், ஹன்சிகா, அஞ்சலி.. அடுத்து நந்திதா. படம்.. புலி!

சிம்புதேவன் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்போது ஆந்திராவின் அடர்ந்த காட்டுபகுதியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

ஸ்ருதி - ஹன்சி

ஸ்ருதி - ஹன்சி

பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தில் முதலில் நாயகிகளாக ஒப்பந்தமானவர்கள் ஸ்ருதி ஹாஸன் மற்றும் ஹன்சிகா.

நந்திதா

நந்திதா

இந்நிலையில் இன்னொரு ரோலுக்காக நந்திதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவரும் ஓகே சொல்லி, புலி படக்குழுவுடன் இணைந்துள்ளார்.

அஞ்சலி

அஞ்சலி

இதுதவிர ‘அப்பா டக்கர்' மற்றும் 'மாப்பிள்ளை சிங்கம்' படங்கள் மூலம் தமிழுக்கு மறுபிரவேசம் செய்துள்ள அஞ்சலியிடமும் பேசி வருகிறார்களாம்.

நான்கு ஹீரோயின்கள்

நான்கு ஹீரோயின்கள்

அஞ்சலி நடிப்பது குறித்து இன்னும் தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை. அவர் நடிப்பது உறுதியானால், நான்கு நாயகிகளுடன் விஜய் நடிக்கும் முதல் படம் என சொல்லிக் கொள்ளலாம்.

ஸ்ரீதேவிய விட்டுட்டீங்களே..

ஸ்ரீதேவிய விட்டுட்டீங்களே..

ஆங்.. மறந்தே போச்சு. இந்தப் படத்தில் 5வது ஒரு நாயகி இருக்கிறார். அவர்தான், இத்தனை வயதாகியும் தன்னை ஹீரோயின் என்றே சொல்லிக் கொள்ளும் ஸ்ரீதேவி. படத்தில் ஹீரோவுக்கு இணையான ரோலாம் அவருக்கு!

English summary
There are 4 heroines, Shruthi Hassan, Hansika, Nandhitha and Anjali are playing in Vijay's Puli movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil