யாரு...நான் கார் இன்சூரன்ஸ் கட்டலையா...நச்சுன்னு பதிலடி கொடுத்த விஜய்
சென்னை : நடிகர் விஜய் பயன்படுத்திய மாருதி காருக்கு இன்சூரன்ஸ் கட்டவில்லை என பரவிய குற்றச்சாட்டிற்கு விஜய் சரியான பதிலடித்து கொடுத்துள்ளார். விஜய்யின் இந்த பதிலுக்கு ஆதரவுகள் பெருகி வருகின்றன.
கடந்த தேர்தலின் போது சைக்கிளில் வந்து ஓட்டு போட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் விஜய். இதே போல் பிப்ரவரி 19 ம் தேதி நடந்த நகராட்சி அமைப்புக்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் நீலாங்கரையில் உள்ள ஓட்டுச்சாவடியில் காலை 7 மணிக்கே முதல் ஆளாக வந்து வாக்களித்தார் விஜய். கருப்பு மாஸ்க், சிவப்பு நிற கார், பச்சை சட்டையில் விஜய் வந்தது, அவரை போட்டோ எடுக்க வந்த போட்டோகிராஃபர் ஒருவர் தவறி விழுந்த போது விஜய் தூக்கி விட்டது போன்ற விஷயங்கள் மீடியாக்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

சோஷியல் மீடியாவில் பரவிய வதந்தி
அதோடு அங்கு ஓட்டளிப்பதற்காக தனக்கு முன் வரிசையில் நின்றவர்களிடம், தனது வருகையில் அவர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக விஜய் மன்னிப்பும் கேட்டார். இது போன்ற சின்ன சின்ன விஷயங்களை விஜய் ரசிகர்களும், மீடியாக்களும் கொண்டாடி வந்த நிலையில், விஜய் வந்த காரை வைத்து சிலர் சோஷியல் மீடியாவில் வதந்தி பரப்பினர்.

என்னது விஜய் இன்சூரன்ஸ் கட்டலையா
ஓட்டுப் போடுவதற்காக சிவப்பு நிற மாருதி செலிரியோ காரில் வந்தார் விஜய். அவர் வந்த இந்த காருக்கு இன்சூரன்ஸ் கட்டாமல் பாக்கி வைத்திருப்பதாக தகவல்கள் பரவியது. அதோடு விஜய் கார் இன்சூரன்ஸ் பாக்கி வைத்து, அது புதுப்பிக்காமல் இருப்பதற்கான ஆர்டிஓ செலானையும் சிலர் பப்ளிசிட்டிக்காக ட்விட்டரில் பரவ விட்டனர். இதை உண்மை என நம்பி பலரும் விஜய்யை மிக கடுமையாக விமர்சித்தனர்.

யாரு...நாங்க இன்சூரன்ஸ் கட்டலையா
இந்நிலையில் இன்று விஜய் சார்பாக ரியாஸ் அகமது என்பவர் விஜய் பயன்படுத்திய மாருதி காரின் இன்சூரன்ஸ் காப்பியை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் விஜய் பயன்படுத்தி வரும் மாருதி செலிரியோ காருக்கான இன்சூரன்ஸ் 2022 ம் ஆண்டு மே மாதம் வரை இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதை வைத்து விஜய் பற்றி தவறான தகவல் பரப்பியவர்களை திட்டி தீர்த்து வருகின்றனர்.

அடுத்தடுத்த கார் பிரச்சனையா
தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். இந்த படம் விரைவில் ரிலீசிற்காக தயாராகி வருகிது. அடுத்த படியாக தெலுங்கு டைரக்டர் இயக்கும் தளபதி 66 படத்தில் நடிக்க விஜய் தயாராகி வருகிறார். சமீபத்தில் தான் ஏற்றுமதி காருக்கான வரி விலக்கு தொடர்பான வழக்கில், விஜய்யிடம் அபராதம் வசூலிக்க சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் மற்றொரு கார் விஷயத்தில் விஜய் சர்ச்சையில் சிக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











