»   »  வெற்றிமாறனுடன் கைகோர்க்கிறார் விஜய்?

வெற்றிமாறனுடன் கைகோர்க்கிறார் விஜய்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
நீலாங்கரை வீட்டை காலி செய்துவிட்டு காரை மாற்றிய விஜய்!- வீடியோ

சென்னை: கோடம்பாக்கத்தில் ஸ்ட்ரைக் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், புதிய மெகா பட்ஜெட் படங்களுக்கான வேலைகளும் ஜரூராக நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இன்றைய ஹீரோக்களில் ஹாட் சேல்ஸ் நடிகரான விஜய்யின் அடுத்த படங்களை இயக்கும் இயக்குநர்கள் பற்றித்தான் இப்போது பரபரப்பாக பேசுகிறார்கள்.

Vijay to join with Vetrimaaran?

விஜய்யின் 62வது படத்தை முருகதாஸ் இப்போது இயக்கிக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்தின் 40 சதவீதப் படப்பிடிப்பு முடிந்து, ஸ்ட்ரைக் காரணமாக மீதி வேலைகள் நிற்கின்றன.

இந்த நேரத்தில் விஜய்யின் 63வது படம் குறித்த பேச்சுகள் கிளம்பிவிட்டன. இப்போது வெற்றி மாறன் வட சென்னை படத்தை முடிப்பதில் தீவிரமாக உள்ளார். இருவரும் இப்போதுள்ள படங்களை முடித்ததும், அடுத்த படத்தில் இணைவதாக ஒரு பேச்சு கிளம்பியுள்ளது.

இதுகுறித்து விசாரித்தபோது, "இன்னும் விஜய்யும் வெற்றிமாறனும் ஒரு முறை கூட சந்தித்ததில்லை. ஆனால் வெற்றிமாறன் மீது விஜய்க்கு ஏக மரியாதை உண்டு. அவரிடம் தனக்கான கதையைக் கேட்கும் ஆவலும் உள்ளது. ஆனால் உரிய நேரம் இன்னும் வரவில்லை," என்றனர்.

தனுஷ் தவிர வேறு பெரிய நடிகர்கள் யாரையும் வைத்து இன்னும் வெற்றி மாறன் இயக்கவில்லை. விஜய் மாதிரி ஒரு ஹீரோவை இயக்க அவரும் பெரும் ஆர்வத்துடன் உள்ளாராம்.

இதற்கிடையில் இயக்குநர் ராமிடம் கதை கேட்கவும் விஜய் ஆர்வம் காட்டுவதாக செய்தி கசிந்துள்ளது.

English summary
Sources say that Vijay is keen to hear a stroy for him from leading director Vetri Maaran

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X