World Cup: உலகக் கோப்பையை உச்சி முகர்ந்த மகளிர் அணி.. வாழ்த்துகளை அள்ளி வீசும் பிரபலங்கள்!
சென்னை: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பலமான தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது இந்திய மகளிர் அணி. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா மகளிர் அணியின் கேப்டன் லாரா வால்வர்ட் இந்திய அணியை பேட்டிங் செய்யச் சொன்னார். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில், ஷஃபாலி வர்மா 87 ரன்களும் தீப்தி சர்மா 58 ரன்களும் அதிகமாக எடுத்திருந்தனர்.
அதன் பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அதிகபட்சமாக கேப்டன் லாரா வால்வர்ட் 101 ரன்கள் குவித்திருந்தாலும், இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இந்திய மகளிர் அணி வெல்லும் முதல் உலகக் கோப்பை இதுதான். இந்நிலையில் திரைப் பிரபலங்கள் பலரும் இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

விஜய் & கீர்த்தி சுரேஷ்: நடிகர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், " முதல் முறையாக ஐசிசி உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துகள். நமது இந்தியாவுக்கு இது வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்" என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் நடிகை கீர்த்தி சுரேஷ், " நமது அணியின் கிரிக்கெட் என்பது மன உறுதிரௌ அளிப்பதாகவும், பெருமை அடையச் செய்வதாகவும் இருந்ததுடன், அவர்கள் இதயத்தில் இருந்து விளையாடி HerStory-யை உருவாக்கி உள்ளார்கள். இன்னும் சொல்லப்போனால் ரொம்பவும் ஸ்டைலாக விளையாடினார்கள். உலகக் கோப்பையை நமதாக மாற்றிய மகளிர் அணிக்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
பிரியங்கா சோப்ரா: நடிகை பிரியங்கா சோப்ராவோ, " நான் எனது சிறுவயதில் கிரிக்கெட் பார்க்கும்போது பல ஜாம்பவான்களைப் பார்த்து வளர்ந்தவள். இன்றைக்கு அந்த ஜாம்பவான்கள் எல்லாம் பெண்களாக மாறி கிரிக்கெட் விளையாடுவது போல் இருந்தது. உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார். நடிகை ஷாலினி பாண்டே தனது இன்ஸ்ராகிராம் பக்கத்தில் மிகவும் எமோஷனலாக, கோப்பையை வென்றதற்கு நன்றிகள்" என்று பதிவிட்டுள்ளார். இது பலரது இந்திய மகளிர் அணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











