»   »  ராதாரவியுடன் விஜய்.. விஷால் குரூப்புக்கு எதிர் நிலையா?

ராதாரவியுடன் விஜய்.. விஷால் குரூப்புக்கு எதிர் நிலையா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
தென்னிந்திய திரையுலக டப்பிங் சங்கத் தலைவராகும் ராதாரவி!- வீடியோ

சென்னை : சினிமா துறையினரின் வேலைநிறுத்தம் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் நிலையில் சிறப்பு அனுமதி பெற்று சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'விஜய் 62' படத்தின் படப்பிடிப்பு நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் இந்தப் படப்பிடிப்பின்போது விஜய்யும் ராதாரவியும் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது ட்விட்டரில் வெளியாகி வைரலாகி வருகிறது. 'தளபதி 62' படத்தில் ராதாரவி அரசியல்வாதி வில்லனாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Vijay meets radharavi makes controversy

மேலும் ராதாரவி சமீபத்தில் திமுகவில் இணைந்து தீவிர அரசியல் செய்து கொண்டிருக்கும் நிலையில் ராதாரவியுடன் விஜய் அரசியல் குறித்து பல விஷயங்கள் பேசியதாகவும் கூறப்படுகிறது. கோலிவுட் திரையுலகில் இருந்து பலர் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியல் களத்தில் குதித்து வரும் நிலையில் விஜய்யின் பார்வையும் அரசியல் பக்கம் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதவிர, ராதாரவி தற்போதைய தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷாலுக்கு எதிர் தரப்பில் இருப்பவர். நடிகர் சங்கப் பொறுப்பில் இருந்தும் விலக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டதால் விஷாலின் நடவடிக்கைகள் பலவற்றிற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

ஸ்ட்ரைக்கின்போதும் ஷூட்டிங் நடத்தியதால் தயாரிப்பாளர்கள் மத்தியில் விஜய் மீதும் அதிருப்தி நிலவியது. இந்நிலையில், விஜய் ராதாரவியைச் சந்தித்துப் பேசியுள்ளது சினிமா உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Vijay and Radharavi took a photo of 'Vijay 62' film shooting. Radharavi and Vijay shares a lot of things about politics.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X