»   »  பிரபுவின் அன்னை இல்லத்தில் விஜய், செல்வராகவன் சந்திப்பு: நடந்தது என்ன?

பிரபுவின் அன்னை இல்லத்தில் விஜய், செல்வராகவன் சந்திப்பு: நடந்தது என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபுவின் அன்னை இல்லத்தில் வைத்து இயக்குனர் செல்வராகவன், விஜய் சந்திப்பு நடந்துள்ளது.

இளைய தளபதி விஜய் தற்போது பரதனின் இயக்கத்தில் பைரவா படத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார். பட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் விஜய் அடுத்தடுத்த படங்களில் நடிப்பது குறித்து முடிவு எடுத்து வருகிறார்.

அட்லீ

அட்லீ

பைரவா படத்தை முடித்த பிறகு விஜய் மீண்டும் அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி சூப்பர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வராகவன்

செல்வராகவன்

செல்வராகவனுக்கு விஜய்யை வைத்து படம் பண்ணும் ஆசை வந்துள்ளது. விஜய்க்காக செல்வா ஒரு கதையை தயார் செய்து வைத்துள்ளார். விஜய், செல்வா இணையும் இந்த படத்தை தனுஷ் தயாரிப்பார் என கூறப்பட்டது.

பிரபு

பிரபு

விஜய், செல்வா இணையும் படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் நடிகர் பிரபு விநாயகர் சதுர்த்தி அன்று செல்வாவை தனது அன்னை இல்லத்திற்கு வரவழைத்துள்ளார்.

விஜய்

விஜய்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள அன்னை இல்லத்திற்கு வருமாறு பிரபு விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார். விஜய்யும் அன்னை இல்லத்திற்கு வந்து மதிய விருந்தில் கலந்து கொண்டுள்ளார்.

சந்திப்பு

சந்திப்பு

சாப்பிட்டு முடித்த பிறகு விஜய் மற்றும் செல்வராகவன் பேச ஒரு அறையை ஒதுக்கியுள்ளார் பிரபு. அங்கு செல்வா தான் விஜய்க்கு தயார் செய்த கதையை அவரிடம் கூறியுள்ளார்.

திருத்தம்

திருத்தம்

செல்வராகவன் கூறிய கதை விஜய்க்கு பிடித்துவிட்டது. ஒரு சில மாற்றங்களை மட்டும் செய்யுமாறு கூறியுள்ளாராம் விஜய். இந்நிலையில் அட்லீ படத்தை அடுத்து செல்வா படத்தில் விஜய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Actor Vijay has met director Selvaraghavan at Prabhu's residence on Vinayakar Chathurthi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil