»   »  ப்ளூ சட்டை விமர்சகருக்கு எதிராக பொங்கிய இயக்குநர்!

ப்ளூ சட்டை விமர்சகருக்கு எதிராக பொங்கிய இயக்குநர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அஜித் நடிப்பில் சிவா இயக்கிய 'விவேகம்' திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் நெகட்டிவ் விமர்சனங்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில், யூ-ட்யூப் திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் 'விவேகம்' படத்தையும், இயக்குநர் சிவாவையும் தனது விமர்சனத்தில் மோசமாக விமர்சித்திருந்தார்.

அந்த ரிவ்யூ வீடியோ சமூக வலைதளங்களில் பயங்கர வைரலானது. அஜித் ரசிகர்கள் இந்த விமர்சனம் தனிப்பட்ட விரோதத்தால் போடப்பட்டது என ப்ளூ சட்டை மாறனைத் திட்டிக்கொண்டிருந்தனர்.

Vijay milton anger on Blue sattai maaran

இதனால் ரசிகர்கள் தாண்டி சினிமா கலைஞர்களும் கோபமாக உள்ளனர். இந்நிலையில் இயக்குனர் விஜய் மில்டன் ப்ளூ சட்டை மாறனுக்கு சினிமா எப்படி உருவாகிறது என்பதைத் தனது பாணியில் விளக்கமாகச் சொல்லி பதிலடி கொடுத்துள்ளார்.

'சினிமா எடுப்பது ஒரு குழந்தையைப் பிரசவிப்பது போல. அந்தக் குழந்தை சில நேரங்களில் குறைபாடாகப் பிறந்தாலும், அதற்கான உழைப்பு எப்போதும் பயங்கரமானது. அதைக் கீழ்த்தரமாக கிண்டல் செய்வது மோசமான செயல்பாடு. இனிமேலாவது இந்த மாதிரியான விமர்சனங்கள் வெளியிடுவதை நிறுத்துங்கள்' எனக் கோபமாகப் பேசியுள்ளார்.

English summary
Vijay milton uploaded 2 minutes video review about Blue sattai maaran.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil