twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரன், சண்டக்கோழி, வேட்டையை நழுவவிட்ட விஜய்

    By Siva
    |

    சென்னை: ரன், சண்டக்கோழி மற்றும் வேட்டை படங்கள் விஜய் நடிக்க வேண்டியது என்று இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

    விஜய்யை வைத்து படம் எடுக்க கோலிவுட் இயக்குனர்கள் ஆர்வமாக உள்ளனர். இதற்கு இயக்குனர் லிங்குசாமி ஒன்றும் விதிவிலக்கு அல்ல. விஜய் சில படங்களின் கதையைக் கேட்டு அதில் நடிக்க முடியாமல் போயுள்ளது. அந்த படங்கள் ரிலீஸான பிறகு அடடடா நல்ல படத்தை மிஸ் பண்ணிட்டோமே என்று அவர் வருத்தப்பட்டதும் உண்டு.

    இந்நிலையில் விஜய் மிஸ் பண்ணிய மேலும் 3 படங்கள் குறித்து தெரிய வந்துள்ளது.

    மாதவன் நடித்த ரன்

    மாதவன் நடித்த ரன்

    லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், மீரா ஜாஸ்மீன் நடிப்பில் வெளிவந்த ரன் படம் சூப்பர் ஹிட்டானது. ஆனால் அந்த படத்தின் திரைக்கதையை விஜய்யை மனதில் வைத்து எழுதியுள்ளார் லிங்குசாமி. பல்வேறு காரணங்களால் விஜய் நடிக்க முடியாமல் போனது.

    விஷாலின் சண்டக்கோழி

    விஷாலின் சண்டக்கோழி

    விஷால், மீரா ஜாஸ்மீனை வைத்து லிங்குசாமி இயக்கிய வெற்றிப் படம் சண்டக்கோழி. இந்த படத்தின் கதையும் விஜய்யை மனதில் வைத்து எழுதப்பட்டது. ஆனால் இதிலும் விஜய் நடிக்கவில்லை.

    மாதவன், ஆர்யாவின் வேட்டை

    மாதவன், ஆர்யாவின் வேட்டை

    மாதவன், ஆர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வேட்டை படம் நன்றாக ஓடியது. லிங்குசாமி இந்த படத்தில் விஜய்யை நடிக்க வைக்கும் எண்ணத்தில் இருந்துள்ளார். கதையையும் விஜய்யிடம் கூறியுள்ளார். ஆனால் விஜய் நடிக்க முடியாமல் போனது.

    அடுத்து விஜய்யை இயக்கும் லிங்குசாமி?

    அடுத்து விஜய்யை இயக்கும் லிங்குசாமி?

    ரன், சண்டக்கோழி, வேட்டை படக் கதைகளை விஜய்யிடம் கூறியும் அவர் நடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் தான் சூர்யாவை வைத்து எடுக்கும் படத்தை முடித்த பிறகு இளைய தளபதியுடன் படம் பண்ணப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    Director Lingusamy told that he actually narrated the stories of Run, Sandakozhi and Vettai to Vijay. But Viajy was not able to act in those movies, he added. He said that he might work with Vijay after completing his project with Suriya.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X