»   »  கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்.. இணையத்தை 'தெறி'க்க விடும் ரசிகர்கள்

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்.. இணையத்தை 'தெறி'க்க விடும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் - அட்லீ படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் நேற்று மாலை வெளியானது. உடனே இதற்காகத் தானே காத்திருந்தோம் என்று அவரது ரசிகர்கள் தற்போது இணையத்தை தெறிக்க விட்டு வருகின்றனர்.

படத்தின் தலைப்பும், பர்ஸ்ட் லுக்கும் விஜய் ரசிகர்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் ரசிகர்களின் ட்வீட்களினால் இணைய உலகமே அதிரும் அளவிற்கு ரசிகர்களின் உற்சாகம் நேற்று கரை கடந்தது.


இணையத்தை தெறிக்க விட்ட விஜய் ரசிகர்களின் பதிவுகள் சிலவற்றை இங்கே காணலாம்.


கண்ணால் காண்பதும் பொய்

கண்ணால் காண்பது, வாயால் சொல்வது,காதால் கேட்பது எல்லாமே பொய் தீர விசாரிப்பதே மெய் என்று தெறிக்கு விளக்கம் சொல்லியிருக்கிறார் நாகார்ஜுன்.


திருமலை

திருமலை, திருப்பாச்சி, துப்பாக்கி வரிசையில் அடுத்த பிளாக்பஸ்டர் தெறி வந்து கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார் தெறி விக்னேஷ்.


சொன்னா புரியாது

சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது நாங்க எல்லாம் 'விஜய் அண்ணா' மேல வச்ச பாசம் என்று ஜெயசீலம் கூறியிருக்கிறார்.


நேத்து தான்

நேத்துதான் FLரிலீஸாச்சு அதுக்குல்ல தெறி குதுன்னா அது தளபதியால மட்டும் தான் முடியும் என்று பிரபு ட்வீட் செய்திருக்கிறார்.
English summary
Vijay - Atlee Film Titled Theri Now Trending in All Social Networks.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil