விஜய் ரசிகர்களே... தளபதிக்கு ஓட்டு போட தயாரா?
Recommended Video

சென்னை : கடந்த ஆண்டு 'மெர்சல்' படத்தின் மூலம் நாடு முழுவதும் கவனம் பெற்ற நடிகர் விஜய்க்கு இந்த வருடமும் சிறப்பான வருடமாகத் தொடங்கி இருக்கிறது.
இங்கிலாந்து நாட்டில் தேசிய திரைப்பட அகாடமி வழங்கும் 2018-ம் ஆண்டு விருதுக்கான போட்டியில் சிறந்த துணை நடிகர் விருதுக்கு மெர்சல் படத்திற்காக விஜய் இடம் பெற்றுள்ளார்.
அதோடு 'மெர்சல்' திரைப்படமும் சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான போட்டியில் இடம் பிடித்துள்ளது.

விஜய் நடிப்பு
ரசிகர்களை தாண்டி பல பிரபலங்களும் விஜய்யின் நடிப்புக்கு ரசிகர்கள். 25 ஆண்டுகளைக் கடந்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வரும் விஜய்க்கு உலகம் முழுவதும் பல்வேறு கௌரவங்கள் கிடைத்திருக்கின்றன.
தேசிய திரைப்பட அகாடமி விருது
இங்கிலாந்து நாட்டில் தேசிய திரைப்பட அகாடமி வழங்கும் 2018-ம் ஆண்டு விருதுக்கான போட்டியில் சிறந்த துணை நடிகர் விருதுக்கு மெர்சல் படத்திற்காக விஜய் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
மெர்சல் திரைப்படம்
மெர்சல் திரைப்படமும் சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான போட்டியில் இடம் பிடித்துள்ளது. இந்தத் தகவலை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தங்களது ட்விட்டரில் பதிவு செய்து மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆன்லைன் வாக்குப்பதிவு
போட்டியாளர்களில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆன்லைன் வாக்குப்பதிவு நேற்று முதல் ஆரம்பமானது. வரும் 20-ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. விருது பெற்றவர்களின் விவரம் மார்ச் மாதம் 28-ம் தேதி நடைபெற உள்ள தேசிய திரைப்பட விருதுகள் 2018 விழாவில் அறிவிக்கப்பட உள்ளது.
தேசிய அளவில் ட்ரெண்ட்
வெளிநாட்டுப் படங்களுக்கான பிரிவில் மெர்சல் திரைப்படம் நாமினேட் செய்யப்பட்ட தகவல் வெளியானதும், விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் பகிரத் தொடங்கினர். இதன்மூலம் இந்த விஷயம் தேசிய அள்வில் ட்ரெண்ட் ஆகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











