»   »  புலி படத்தில் 3 விஜய்யா? யார் சொன்னது?: தயாரிப்பாளர்

புலி படத்தில் 3 விஜய்யா? யார் சொன்னது?: தயாரிப்பாளர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புலி படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிக்கவில்லை என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தி படத்தை அடுத்து விஜய் நடித்து வரும் பேன்டஸி படம் புலி. சிம்புதேவன் இயக்கி வரும் இந்த படத்தின் மூலம் ஸ்ரீதேவி பல காலம் கழித்து கோலிவுட் திரும்பியுள்ளார். இளம் தலைமுறையினரிடம் இருந்து தான் நிறைய கற்றுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

புலி படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் பற்றி அண்மையில் செய்தி வெளியானது.

மூன்று வேடம்

மூன்று வேடம்

புலி படத்தில் விஜய் மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகின.

இல்லை

புலியில் விஜய் சார் மூன்று வேடங்களில் நடிப்பதாக வெளியானது பொய்யான செய்தி என்று தயாரிப்பாளரான எஸ்கேடி ஸ்டுடியோஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

சோனி

சோனி

புலி படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் வாங்கியுள்ளது.

கேரளா

கேரளா

படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடக்க உள்ளது. கேரளாவில் நடக்க உள்ள படப்பிடிப்பில் ஸ்ருதி ஹாஸன் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

ஹன்சிகா

ஹன்சிகா

படத்தின் மற்றொரு கதாநாயகியான ஹன்சிகா ஓய்வு எடுக்க ஐரோப்பா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Puli producer SKT studios tweeted that, 'Absolutely false news that Vijay sir doing triple role in #Puli.'
Please Wait while comments are loading...