»   »  மேஜிக் கலைஞராக விஜய்... போட்டு உடைத்த ட்வீட்!

மேஜிக் கலைஞராக விஜய்... போட்டு உடைத்த ட்வீட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு எனப் பலர் நடித்துள்ள 'மெர்சல்' படம் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் ஸ்பெஷலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படம் வருகிற தீபாவளிக்கு வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் இப்போதே மெர்சல் ஃபீவர் அடிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில், மெர்சல் படம் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்தப் படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. அதில் மேஜிக் கலைஞர் வேடமும் ஒன்று என இப்போது வரும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

 ட்ரிபிள் ஆக்‌ஷன் :

ட்ரிபிள் ஆக்‌ஷன் :

இந்தப் படத்தில் விஜய், பஞ்சாயத்துத் தலைவர், டாக்டர், மேஜிக் கலைஞர் என மூன்று வேடங்களில் நடித்திருக்கிறாராம். வெளியிடப்பட்ட படத்தின் போஸ்டர்களும் வெவ்வேறு கெட்டப்பில் இருப்பதன் மூலம் இது தெளிவாகிறது.

 மேஜிக் பயிற்சி :

மேஜிக் பயிற்சி :

மற்ற கேரக்டர்களுக்கு நடிக்கத் தெரிந்திருந்தால் போதும். ஆனால், மேஜிக் கலைஞராக நடிப்பதற்கு சிறிதளவேணும் மேஜிக் தெரிந்திருக்க வேண்டும் என நினைத்த படக்குழு அதற்கு பயிற்சி அளிக்க முடிவு செய்திருக்கிறார்கள். விஜய்யும் ஆர்வமாக மேஜிக் கற்றுக்கொள்ளச் சம்மதித்தாராம்.

வெளிநாட்டு மேஜிக் நிபுணர் :

விஜய்க்குப் பயிற்சி அளிப்பதற்காக வெளிநாட்டு மேஜிக் கலைஞர் கோகோ ரெக்கியூம் சென்னைக்கு வரவழைக்கப்பட்டார். இங்கே தங்கியிருந்து சில அடிப்படையான மேஜிக் வித்தைகளைக் கற்றுக் கொடுத்திருக்கிறார் கோகோ ரெக்கியூம். கற்றுக்கொடுத்ததோடு மட்டுமல்லாமல் மேஜிக் தொடர்பான காட்சிகளைப் படமாக்கும்போது ஆலோசகராக உதவி செய்தாராம்.

கோகோ ட்வீட் :

இது தொடர்பாக, கோகோ ரெக்கியூம் தனது ட்விட்டர் பக்கத்தில், 'புகழ்பெற்ற நடிகர் ஜோசப் விஜய்யுடன் இணைந்து பணியாற்றியதைப் பெருமையாகக் கருதுகிறேன். அதற்காக நிறைய பேர் பாராட்டி வருகிறார்கள். அவ்வளவு பாராட்டுகளுக்கு நான் தகுதியானவன் இல்லை. வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி' எனக் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Vijay play as a magician in 'Mersal' movie. The famous magician Gogo Requiem tweet about mersal.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil