»   »  விஜய் 60: மீண்டும் அழகிய தமிழ் மகனாக மாறும் விஜய்?

விஜய் 60: மீண்டும் அழகிய தமிழ் மகனாக மாறும் விஜய்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தில் அவருக்கு இரட்டை வேடங்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

தெறியைத் தொடர்ந்து விஜய் தற்போது பரதன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும், காமெடி வேடத்தில் சதீஷும் நடித்து வருகின்றனர்.

2 வேடங்கள்

2 வேடங்கள்

இந்நிலையில் விஜய் இப்படத்தில் 2 வேடங்களில் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு வேடத்தில் திருநெல்வேலி பாஷை பேசுபவராகவும், மற்றொரு வேடத்தில் மொட்டையடித்த தோற்றத்துடனும் விஜய் நடித்து வருகிறாராம்.

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். வில்லன்களாக டேனியல் பாலாஜி, ஜெகபதி பாபு, ஹரிஷ் உத்தமன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் சதீஷ், மைம் கோபி, ஸ்ரீமன், ஒய்.ஜி.மகேந்திரனும் நடித்து வருகின்றனர்.

ஹைதராபாத்

ஹைதராபாத்

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து 2 வது கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத், ராஜமுந்திரி பகுதிகளில் ஜூன் மாதம் நடத்திட படக்குழு திட்டமிட்டுள்ளது.

அழகிய தமிழ்மகன்

அழகிய தமிழ்மகன்

முன்னதாக பரதன் இயக்கத்தில் அழகிய தமிழ் மகன், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கத்தி ஆகிய படங்களில் விஜய் 2 வேடங்களில் நடித்திருந்தார். இதில் கத்தி ஹிட்டடிக்க அழகிய தமிழ்மகன் தோல்வியைத் தழுவியது.

English summary
Sources said Vijay Playing Dual Role in Vijay 60.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil