»   »  ஜுனியர் என்டிஆர் படத்துக்கு குறி வைக்கும் 'ரீமேக் கில்லி' விஜய்?

ஜுனியர் என்டிஆர் படத்துக்கு குறி வைக்கும் 'ரீமேக் கில்லி' விஜய்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தெலுங்கு படங்களை ரீமேக் செய்து அந்த வெற்றிகள் மூலம் முன்னணிக்கு வந்தவர்தான் கில்லி விஜய்.

கில்லி முதல் போக்கிரி வரை விஜய்யின் ரீமேக் படங்கள் எல்லாம் வசூலில் சாதனைப் படைத்தவை. முக்கியமாக, மகேஷ் பாபுவின் ஹிட் படங்களைத்தான் குறி வைப்பார் விஜய். ஆனால் இந்த முறை ஜுனியர் என்டிஆர் படத்தின் மீது பார்வை விழுந்திருக்கிறது. அந்த இடத்தை பிடித்திருக்கிறார்.

Vijay to remake Junior NTR movie?

ஜுனியர் என் டிஆர் மோகன்லால் காம்பினேஷனில் போன மாதம் வெளியாகி நூறு கோடி வசூலைத் தாண்டி இருநூறு கோடி வசூலை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் படம் ஜனதா கேரஜ். இதுவரை மட்டுமே 181 கோடி வசூலாகி இருக்கிறது. பக்கா கமர்ஷியல் படமான ஜனதா கேரஜை தமிழுக்கு மாற்றலாமா என்று யோசிக்கிறாராம் விஜய். யோசனை லெவலில் இருக்கும்போதே தனக்கு நெருக்கமான ஒரு தயாரிப்பாளரிடம் சொல்லி படத்தின் ரீமேக்கை விலைபேச சொல்லிவிட்டாராம்.

அடுத்து அட்லீ அதற்கு அடுத்து செல்வராகவன் என்று ரூட் பிடித்திருக்கும் விஜய்
ஒருவேளை அட்லீயிடமே கூட இந்த கதையை எடுக்க சொல்லலாம். அட்லீ தான் மௌன ராகம், சத்திரியன் என தமிழ்ப் படங்களை ரீமேக் செய்வதிலேயே கில்லாடியாச்சே!

English summary
Sources says that actor Vijay is planning to remake Junior NTR's movie as his next.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil