Just In
- 24 min ago
மனிதாபிமான செயல்பாடுகள்.. நடிகர் அன்பு பாலாவுக்கு அமெரிக்க பல்கலை கவுரவ டாக்டர் பட்டம்!
- 55 min ago
கவர்ச்சி பாதைக்கு ரூட்டை மாற்றும் பிரபல இளம் நடிகை!
- 1 hr ago
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.. அப்பா நன்றாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை
- 1 hr ago
இசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி!
Don't Miss!
- News
தடுப்பூசி போட்ட 580 பேருக்கு ஒவ்வாமை... 7 பேர் மருத்துவமனையில் அனுமதி.. மத்திய அரசு தகவல்!
- Sports
1000 ரன்களை விரைவாக அடிச்ச விக்கெட் கீப்பர்... டெஸ்ட் போட்டிகளில் பந்த் புதிய சாதனை
- Finance
சாலை விதிகளை மீறினால், அதிக இன்சூரன்ஸ் கட்டணம்.. புதிய விதிமுறை அமல்படுத்த பரிந்துரை..!
- Automobiles
போச்சு... மாருதி கார்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன!! புதிய விலைகளை பார்த்துவிட்டு கார்களை வாங்குங்கள்!
- Lifestyle
இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஃபேன்ஸ கூப்பிடாததுக்கு காரணம் அந்த விஷயம்தான்.. அர மனசாதான் ஒத்துக்கிட்டேன்.. வருத்தப்பட்ட விஜய்!
சென்னை: மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவுக்கு ரசிகர்களை அழைக்காதற்கான காரணத்தை நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் மாஸ்டர். இந்தப் படத்தின் குட்டி ஸ்டோரி சிங்கிள் ட்ராக் பாடல் அண்மையில் வெளியானது.
பணவீக்கம், வேலை வாய்ப்பின்மை என பல பிரச்சனைகளை பேசியது அந்த பாடல். அதனை தொடர்ந்து படமும் அரசியல் பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நான் தான் ஹீரோ.. விஜய்சேதுபதி சொன்ன ட்விஸ்ட் ஸ்டோரி.. மாஸ்டர்ல என்ன சர்ப்ரைஸ்லாம் இருகப்போகுதோ?

வரவேண்டாம்
வழக்கமாக விஜய் பட ஆடியோ லாஞ்சுகள் பிரமாண்டமாக நடைபெறும். விஜயின் ஆடியோ லாஞ்ச் விழாவில் ரசிகர்கள் பெருமளவில் பங்கேற்பார்கள். ஆனால் இம்முறை சிம்பிளாக நட்சத்திர ஹோட்டலில் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ரசிகர்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வரவேண்டாம், சன் டிவியில் ஒளிபரப்பாகும் நேரலையை பாருங்கள் என கேட்டுக் கொள்ளப்பட்டது

பிரபலங்கள் பங்கேற்பு
இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் விஜய், விஜய் சேதுபதி, அர்ஜூன் தாஸ், மாளவிகா மோகனன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், ரம்யா, தீனா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

எனக்கும் வருத்தம் இருக்கு
இந்நிகழ்ச்சியில் கறுப்பு நிற கோட் சூட்டில் அட்டகாசமாக பங்கேற்றிருந்தார் நடிகர் விஜய். தொடர்ந்து விழாவில் பேசிய நடிகர் விஜய், ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு தனது பேச்சை தொடங்கினார். ரசிகர்கள் வர முடியாமல் வருத்தப்படுற அதே வருத்தம் எனக்கும் இருக்கு. அதுக்கு முக்கிய காரணம், போன ஃபங்ஷன்ல ஆடிட்டோரியமுக்கு வெளியே நடந்த அந்த விஷயங்கள்தான்.

அரை மனசாதான்..
அந்த மாதிரி இன்னோரு விஷயத்தை நீங்க ஃபேஸ் பண்ண கூடாதுன்னுதான் இப்படி விழாவை நடத்த அரை மனசாதான் ஒத்துக்கிட்டேன் என்று வருத்தப்பட்டார் நடிகர் விஜய். மேலும் இதை நீங்க முழு மனசா ஒத்துப்பீங்க என்று நம்புகிறேன் என்றார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால்தான் ஹோட்டலில் இசை வெளியீட்டு விழா நடத்தப்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் அது இல்லை காரணம் என போட்டு உடைத்துவிட்டார் விஜய்.

ரசிகர்கள் மீது தடியடி
கடந்த முறை பிகில் ஆடியோ லாஞ்ச் விழா தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. அப்போது கட்டுக்கடங்காமல் விஜய் ரசிகர்கள் திரண்டனர். அவர்கள் போலீசாரையும் மீறி அரங்கிற்குள் நுழைய முயன்றதால் அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இந்த காரணத்திற்காகதான் தற்போது ஹோட்டலில் நடத்தப்படுகிறது என்று கூறியிருக்கிறார் விஜய்.