Don't Miss!
- News
"மரண அடி".. இதான் கரெக்ட்டான டைம்.. இதுக்கும் தடையா?.. தாலிபன்களின் ஓவர் அட்டகாசம்.. எகிறிய ஐ.நா.
- Finance
பட்ஜெட் 2023: இதற்கு தான் முக்கியத்துவம் தரனும் - ப. சிதம்பரம்..!
- Lifestyle
இறந்த உடலை சாப்பிட்ட அரசர்கள் முதல் அரசவையில் சுயஇன்பம் செய்த அரசர் வரை தலைசுற்ற வைத்த மன்னர்கள்...!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Sports
"எங்களுக்கு நீங்க ஆர்டர் போடாதீங்க" பணிச்சுமை விவகாரம்.. பிசிசிஐ - ஐபிஎல் அணிகள் இடையே மோதல்- விவரம்
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விஜய் பிறந்தநாளுக்கு இவங்களும் ட்ரீட் கொடுக்க போறாங்களா...இதை எதிர்பார்க்கவே இல்லையே
சென்னை : விஜய்யின் 48 வது பிறந்தநாள் ஜுன் 22 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை எப்படி எல்லாம் சிறப்பாக கொண்டாடுவது என ரசிகர்கள், கோலிவுட் பிரபலங்கள், படக்குழுவினர் என போட்டி போட்டு பிளான் செய்து வருகிறார்கள்.
Recommended Video
விஜய்யின் பிறந்தநாளுக்காக வழக்கம் போல் போஸ்டர், பேனர், கட்அவுட், விருந்து, நலத்திட்ட உதவிகள் என பலவிதங்களில் கொண்டாட ரசிகர்கள் ஏற்கனவே ஏற்பாடு செய்ய துவங்கி விட்டனர்.
விஜய்யின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு, கோலிவுட் பிரபலங்கள் 48 பேர் ஒன்றிணைந்து காமன் டிபி.,யை வெளியிட்டனர். தன்னை தானே செதுக்கியவன் என்ற தீமுடன் வெளியிடப்பட்ட இந்த சிடிபி செம டிரெண்டாகி வருகிறது.
பாகுபலி-2 சாதனை முறியடிப்பு..5 வருடங்களில் இல்லாத சாதனை.. தொடர் வெற்றியில் விக்ரம்.. கமல் உற்சாகம்

தளபதி 66 ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
இதைத் தொடர்ந்து விஜய் தற்போது நடித்து வரும் தளபதி 66 படக்குழுவினர், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜுன் 21 ம் தேதி மாலை 6.01 மணிக்கு தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட உள்ளதாக அதிகராப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

டைட்டிலும் வர போகிறதா
அதுமட்டுமல்ல ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஜுன் 21 ம் தேதி நள்ளிரவு சரியாக 12 மணிக்கு தளபதி 66 படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்பட உள்ளது. அதோடு தளபதி 66 படத்தின் டைட்டிலையும் படக்குழு வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் செம எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

தளபதி 67 அறிவிப்பும் வருது
தளபதி 66 மட்டுமல்ல, விஜய் பிறந்தநாளை கொண்டாடும் விதமாகவும், அவரது ரசிகர்களை கொண்டாட வைப்பதற்காகவும், பிறந்தநாள் ட்ரீட்டாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 67 படத்தின் அறிவிப்பையும் தளபதி 67 டீம் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தளபதி 67 படத்தின் அறிவிப்பு ஜுன் 22 ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவங்களும் ட்ரீட் தராங்களா
இந்த சமயத்தில் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ சார்பில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜுன் 21 ம் தேதி மாலை 5 மணிக்கு ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட உள்ளதாக கலர்ஃபுல் போஸ்டர் ஒன்றுடன் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 67 படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் தான் தயாரிக்க உள்ளது.

இன்னும் சர்ப்ரைஸ் இருக்கா
இது தவிர இன்னும் பல ஸ்பெஷல் சர்ப்ரைஸ்கள் விஜய்யின் ரசிகர்களுக்காக காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இன்னும் யாரெல்லாம் என்ன ட்ரீட் கொடுக்க போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.