»   »  நவம்பர் 9-ல் தெலுங்கு அதிரிந்தி.... ஆந்திர பாஜக ரெடியா?

நவம்பர் 9-ல் தெலுங்கு அதிரிந்தி.... ஆந்திர பாஜக ரெடியா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய்யின் அதிரடி தமிழ் ஹிட் படமான மெர்சல் வரும் நவம்பர் 9-ம் தேதி ஆந்திரா, தெலங்கானா மற்றும் உலகெங்கும் வெளியாகிறது.

விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு உள்ளிட்டோர் நடித்த படம் மெர்சல். அட்லீ இயக்கிய இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்திருந்தார்.

தீபாவளி ஸ்பெஷல்

தீபாவளி ஸ்பெஷல்

இந்தப் படம் கடந்த அக்டோபர் 18-ம் தேதி தீபாவளி வெளியீடாக வந்தது. முதல் இரு தினங்களில் படம் குறித்து எதிர்மறைக் கருத்துக்களையே பலரும் கூறி வந்த நிலையில், படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு, அரசு மருத்துவமனை டாக்டர்கள் பற்றிய விமர்சனக் காட்சிகளை எதிர்த்து பாஜக தலைவர்கள் மற்றும் அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மெர்சல் வெற்றி

மெர்சல் வெற்றி

அதுவே படத்துக்கான விளம்பரமாகவும் அமைந்துவிட, பலரும் இந்தப் படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்ற கேள்வியோடு படத்துக்குச் சென்றனர். இதன் விளைவு, திரையிட்ட இடங்களெல்லாம் மெர்சல் வெற்றியைப் பெற்றது.

சென்சார் பிரச்சினை

சென்சார் பிரச்சினை

மெர்சல் வெளியான அதே தேதியில் அதன் தெலுங்கு டப்பிங்கான அதிரிந்தியை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் சென்சார் பிரச்சினை தொடர்ந்ததால் படத்தை வெளியிட முடியவில்லை. கடந்த வாரம் வெளியிட தேதி அறிவிக்கப்பட்டும், சென்சார் சான்று கிடைக்காததால் படம் வெளியாகவில்லை.

யுஏ சான்று

யுஏ சான்று

இந்த நிலையில் நவம்பர் 2-ம் தேதி படத்துக்கு யு ஏ சான்று வழங்கியது ஆந்திர தணிக்கைக் குழு. இதைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது தேனாண்டாள் நிறுவனம். அதன்படி வரும் நவம்பர் 9-ம் தேதி வியாழக்கிழமை அதிரிந்தி உலகெங்கும் வெளியாகிறது.

அமெரிக்காவில்

அமெரிக்காவில்

சர்ச்சை கிளப்பிய படம் என்பதால் ஆந்திரா, தெலங்கானாவில் அதிக அரங்குகள் இந்தப் படத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தெலுங்கு பேசுபவர்கள் அதிகம் வசிக்கும் அமெரிக்காவிலும் அதிக அரங்குகளில் வெளியாகிறது அதிரிந்தி.

English summary
The Telugu version of Mersal i.e, Athirindhi will be released on November 9 worldwide.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil