லீக்கான விஜய்யின் பீஸ்ட் BTS வீடியோ... வைரலாக்கும் ரசிகர்கள்

சென்னை : பெரிய நடிகர்களின் படங்கள், பெரிய பட்ஜெட் படங்களின் ஷுட்டிங் நடக்கும் செட்டில் போன் பயன்படுத்தக் கூடாது என்ற ரூல்ஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும் அதை மீறி, முக்கிய படங்களின் ஷுட்டிங் ஸ்பாட் ஃபோட்டோக்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகின்றன.

சமீபத்தில் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் ஷுட்டிங் ஃபோட்டோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது. இதனால் ஷுட்டிங் ஸ்பாட் ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மணிரத்னம் எச்சரித்திருந்தார்.

லீக்கான பீஸ்ட் பிடிஎஸ் வீடியோ

லீக்கான பீஸ்ட் பிடிஎஸ் வீடியோ

இதைத் தொடர்ந்து கமல் நடிக்கும் விக்ரம், அருண் விஜய் நடிக்கும் யானை ஆகிய படங்களில் BTS ஃபோட்டோக்களை அந்த படங்களின் டைரக்டர்களே வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தினர். இந்நிலையில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் BTS வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது.

வைரலாக்கிய ரசிகர்கள்

வைரலாக்கிய ரசிகர்கள்

பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது. அன்றைய தினம் அடுத்தடுத்து இரண்டு போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் விஜய் பீஸ்ட் ஷுட்டிங் ஸ்பாட்டில் இருப்பது போன்ற சிறிய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. இந்த ஃபோட்டோ மற்றும் வீடியோவை விஜய் ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து வருகிறார்கள்.

ஸ்டைல் லுக்கில் விஜய்

ஸ்டைல் லுக்கில் விஜய்

இந்த BTS ஃபோட்டோவில் விஜய், கருப்பு நிற சட்டை அணிந்து, மிகவும் ஸ்டையிலான புதிய லுக்கில் காட்சி தருகிறார். சமீபத்தில் டைரக்டர் நெல்சன் திலீப்குமாரின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன், பீஸ்ட் படத்தின் கதையை கசிய விட்டார். பீஸ்ட் படம் தங்கம் கடத்தலை மையமாகக் கொண்ட படம் என கூறினார்.

எல்லாம் கலந்த கலவை

எல்லாம் கலந்த கலவை

இதனால் பீஸ்ட் படம் ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் ஆகியவற்றின் கலவையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய், பூஜா ஹெக்டே லீட் ரோலில் நடித்துள்ள இந்த படத்தின் யோகிபாபு காமெடி ரோலிலும், செல்வராகவன் மற்றும் ஷைன் டாம் சாகோ ஆகியோர் வில்லன் ரோலிலும் நடிக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

அப்டேட் கேட்கும் ரசிகர்கள்

அப்டேட் கேட்கும் ரசிகர்கள்

சென்னையை தொடர்ந்து டெல்லியில் பீஸ்ட் படத்தின் ஷுட்டிங் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் படத்தின் ரிலீஸ் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. ஃபஸ்ட்லுக் போஸ்டருக்கு பிறகு ஏதும் வெளியிடப்படாததால் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X