அடிதூள்... செம ஹாட்டாக வெளியான விஜய்யின் பீஸ்ட் அப்டேட்

சென்னை : டைரக்ரை் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் பீஸ்ட். கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் சார்பில் பெரிய பட்ஜெட்டில் இந்த படம் தயாராகி வருகிறது. பூஜா ஹெக்டே லீட் ரோலில் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் விஜய்க்கு 3 வில்லன்கள் இருப்பதாக சமீபத்தில் தான் அறிவிக்கப்பட்டது. அதில் ஒரு வில்லனாக டைரக்டர் செல்வராகவனும், மற்றொரு வில்லனாக மலையாள நடிகர் ஷைன் டாம் சாகோ ஆகியோர் நடிக்கின்றனர்.

மூன்றாவது வில்லன் யார்

மூன்றாவது வில்லன் யார்

மூன்றாவது வில்லன் யார் என்பது பரம ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது வில்லன் யார் என்பது பற்றிய அறிவிப்பு செம மாஸாக, சஸ்பென்சாக இருக்கும் என படக்குழு ஏற்கனவே கூறி விட்டது. மேலும் இந்த படத்தில் யோகிபாபு, விடிவி கணேஷ், லில்லிபுட் ஃபரூகி, அபர்னா தாஸ், அன்குர் அஜித் விகல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

 சென்னையில் ஷுட்டிங்

சென்னையில் ஷுட்டிங்

ஏப்ரல் மாதம் சென்னையில் பூஜையுடன் துவங்கிய பீஸ்ட் படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் ஜார்ஜியாவில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அடுத்த கட்ட ஷுட்டிங் சென்னையில் நடத்தப்பட்டது. இதில் விஜய் நடித்த பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மூன்றாவது கட்ட படப்பிடிப்பும் தற்போது சென்னையில் நடந்து வருகிறது.

 விஜய்யை சந்தித்த தல தோனி

விஜய்யை சந்தித்த தல தோனி

இந்த படப்பிடிப்பில் சமீபத்தில் தான் டாம் சாகோ கலந்து கொண்டார். சென்னையில் இந்த படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது தான் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தல தோனி, ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விஜய்யை சந்தித்துள்ளார். இது தொடர்பான ஃபோட்டோக்கள் கடந்த வாரம் இணையத்தில் வைரலாகின.

சென்னையில் தானா

சென்னையில் தானா

லேட்டஸ்ட் ஹாட் அப்டேட் என்னவென்றால், சென்னையில் தற்போது நடக்கும் பீஸ்ட் படத்தின் ஷுட்டிங் ஆகஸ்ட் 23 வரை நடக்க போகிறதாம். நேற்று முதல் பூஜா ஹெக்டே, மலையாள நடிகை அபர்னா தாஸ் ஆகியோர் ஷுட்டிங்கில் பங்கேற்று வருகிறார்களாம்.

 யோகிபாபு என்ன ரோலில் நடிக்கிறார்

யோகிபாபு என்ன ரோலில் நடிக்கிறார்

யோகி பாபு உள்ளிட்ட மற்ற நடிகர், நடிகைகள் கடந்த வாரம் முதல் பீஸ்ட் ஷுட்டிங்கில் பங்கேற்று, நடித்து வருகிறார்களாம். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் விஜய்யின் நண்பராக யோகிபாபு நடிக்கிறாராம்.

முதல் முறையாக அன்பறிவு

முதல் முறையாக அன்பறிவு

ஆகஸ்ட் 23 ம் தேதிக்கு பிறகு பீஸ்ட் டீம் ரஷ்யா புறப்பட்டு செல்ல உள்ளதாம். அங்கு முக்கிய காட்சிகள் பலவும் படமாக்கப்பட உள்ளதாம். இந்த படத்திற்கு அன்பறிவு ஸ்டன்ட் அமைத்துள்ளார். விஜய் படத்திற்கு அன்பறிவு ஸ்டன்ட் அமைப்பது இதுவே முதல் முறையாகும்.

பொங்கல் ரிலீசா பீஸ்ட்

பொங்கல் ரிலீசா பீஸ்ட்

ரஷ்யாவில் நடத்தப்பட வேண்டிய ஷுட்டிங்குடன் படத்தின் ஒட்டுமொத்த ஷுட்டிங்கும் நிறைவடைய வாய்ப்புள்ளதாம். அதற்கு பிறகு போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடத்தப்பட உள்ளதாம். இரந்தாலும் பீஸ்ட் படத்தை 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யவே படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X