பீஸ்ட் லேட்டஸ்ட் கலக்கல் அப்டேட்... இது தான் படக்குழுவின் மாஸ் பிளானா ?

சென்னை : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பிரம்மாண்ட படைப்பான பீஸ்ட் படத்தின் ஷுட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல்கட்ட ஷுட்டிங் ஜார்ஜியாவில் நடத்தப்பட்ட நிலையில், அடுத்த கட்ட ஷுட்டிங்குகள் சென்னையிலேயே நடத்தப்பட்டு வருகின்றன.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் செல்வராகவன், ஷைன் டாம் சாகோ ஆகியோர் முக்கிய வில்லன்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் யோகிபாபு, அபர்னா தாஸ், டான்ஸ் மாஸ்டர் சதீஷ், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

சென்னை ஷுட்டிங் ஓவர்

சென்னை ஷுட்டிங் ஓவர்

சென்னையில் நடந்து வரும் இந்த படத்தின் நான்காவது கட்ட படப்பிடிப்பில் பாடல் காட்சிகள், அதிரடி சண்டைக் காட்சிகள், ஷாப்பிங் மாலில் வில்லனால் பிடித்து வைக்கப்பட்ட மக்களை ஹீரோ விஜய் காப்பாற்றுவது போன்ற சீன்கள் எடுக்கப்பட்டுள்ளன. வரும் புதன்கிழமையுடன் சென்னையில் நடைபெற்று வரும் ஷுட்டிங் நிறைவடைய உள்ளது.

இரு மொழி கலந்த பாடல்

இரு மொழி கலந்த பாடல்

கடந்த வார இறுதியில் தான் நான்காவது கட்ட படப்பிடிப்பில் பூஜா ஹெக்டே கலந்து கொண்டார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பீஸ்ட் படத்தில் Habibi ஸ்டையில் பாடல் ஒன்று தமிழ் மற்றும் அராபிக் மொழிகள் கலந்து அமைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டது. இந்த அராபிக் பாடல் முந்தைய கட்ட படப்பிடிப்பிலேயே எடுக்கப்பட்டு விட்டதாம்.

ஸ்பெஷல் செட்

ஸ்பெஷல் செட்

லேட்டஸ்ட் தகவலாக, விஜய் - பூஜா ஹெக்டே நடிக்கும் ஸ்டையிலான டூயட் பாடல் தான் தற்போது படமாக்கப்பட்டு வருகிறதாம். சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோஸில் தான் இந்த பாடல் ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறதாம். இந்த பாடலுக்காக ஸ்டூடியோவில் ஸ்பெஷல் செட் அமைக்கப்பட்டுள்ளதாம்.

இதுக்கு தான் அராபிக் பாடலா

இதுக்கு தான் அராபிக் பாடலா

மற்றொரு புறம், பீஸ்ட் படத்தில் இடம்பெறும் அராபிக் பாடல், திருமணத்தின் போது பாடப்படும் பாடல் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அதனால் இது பேட்ட படத்தில் வரும் கல்யாணம் பாடலை போல், பீஸ்ட் படத்திலும் ஒரு காட்சி அமைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

டெல்லி ஷுட்டிங் துவங்கியாச்சு

டெல்லி ஷுட்டிங் துவங்கியாச்சு

படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஏற்கனவே டெல்லியில் பார்க்கப்பட்ட லொகேஷன்களில் துவங்கப்பட்டு விட்டதாம். அசிஸ்டென்ட் டைரக்டர்களை வைத்து படப்பிடிப்பை துவக்கி உள்ளாராம் நெல்சன் திலீப்குமார்.

நவம்பரில் முடியும் ஷுட்டிங்

நவம்பரில் முடியும் ஷுட்டிங்

சென்னையில் தற்போது நடக்கும் படப்பிடிப்பை முடித்து விட்டு, மீதமுள்ள படக்குழுவினர் இந்த வாரம் டெல்லி செல்ல போகிறார்களாம். நவம்பருக்குள் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். பொங்கலுக்கு பீஸ்ட் படத்தை ரிலீஸ் செய்வதற்காக படக்குழு தயாராகி வருகிறதாம்.

ரஷ்யா போகலையா

ரஷ்யா போகலையா

சென்னையில் நடக்கும் படப்பிடிப்பை முடித்து விட்டு, பீஸ்ட் படக்குழு ரஷ்யா செல்ல உள்ளதாகவும், அங்கு முக்கிய சண்டை காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாகவும் முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென படப்பிடிப்பை டெல்லிக்கு மாற்றி உள்ளனர். ரஷ்யாவில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகளை தான் டெல்லியில் எடுக்கிறார்களா அல்லது டெல்லியில் படப்பிடிப்பை முடித்து விட்டு ரஷ்யா செல்ல உள்ளனரா என இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

 மூன்றாவது வில்லன் சஸ்பென்ஸ்

மூன்றாவது வில்லன் சஸ்பென்ஸ்

அதே போல் படத்தில் விஜய்க்கு 3 வில்லன்கள் என முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு வில்லன்களாக செல்வராகவனும், ஷைன் டாம் சாகோ ஆகியோர் நடிப்பதாக கூறினார்கள். மூன்றாவது வில்லன் பற்றிய அறிவிப்பு மாஸ் சர்ப்ரைஸ் அப்டேட்டாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.

இருக்காரா, இல்லையா

இருக்காரா, இல்லையா

ஆனால் அந்த மூன்றாவது வில்லன் யார், மூன்றாவது வில்லன் இருக்கிறாரா அல்லது இரண்டு வில்லன்கள் மட்டும் தானா என இதுவரை படக்குழு வாய் திறக்கவில்லை. படத்தை நவம்பரில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் மூன்றாவது வில்லன் யார் என்பது பற்றி எந்த அப்டேட்டும் வெளியிடப்படவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X