விஜய்யின் இந்த பிளாக் பஸ்டர் படத்திற்கும் பார்ட் 2 வருது...இந்த முறை யார் கூட்டணியில் தெரியுமா?
சென்னை : பல சூப்பர் ஹிட் படங்களின் பார்ட் 2 எடுக்கப்பட்டு வரும் நிலையில், விஜய்யின் பிளாக் பஸ்டர் படத்தின் பார்ட் 2 கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு எடுக்கப்பட உள்ளதாம். ஆனால் இந்த முறை வேறு கூட்டணியில் இந்த படம் உருவாக உள்ளதாம்.
தமிழில் பல டாப் ஹீரோக்களின் பிளாக் பஸ்டர் படங்களின் இரண்டாம் பாகம் எடுக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. கார்த்தியின் கைதி, சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட சில படங்களும் இந்த லிஸ்டில் உள்ளன. இந்நிலையில் விஜய்யின் பிளாக் பஸ்டர் படமும் பார்ட் 2 இயக்கப்பட உள்ளது.

விஜய்யின் பிளாக்பஸ்டர்
டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2012 ம் ஆண்டு விஜய் நடித்து வெளிவந்த படம் துப்பாக்கி. ஆக்ஷன் த்ரில்லர் படமான இந்த படத்தை முருகதாஸ் எழுதி, இயக்கி இருந்தார். இந்திய ராணுவத்தின் புலனாய்வுத்துறை அதிகாரியான விஜய், ஸ்லீப்பர் செல்களை கண்டுபிடித்து அழிப்பது தான் படத்தின் கதை. காஜல் அகர்வால், ஜெயராம், சத்யன், வித்யுத் ஜமால் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம் பாக்ஸ் ஆபீசில் 175 கோடிகளை வசூல் செய்தது.

3 முறை இணைந்த கூட்டணி
துப்பாக்கி படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரித்திருந்தது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் பல விருதுகளையும் வென்றது. இந்தி, பெங்காலி போன்ற மொழிகளிலும் துப்பாக்கி படம் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணைந்து கத்தி, சர்கார் படங்களில் பணியாற்றின. இந்த படங்களும் பிளாக் பஸ்டர் படங்களாக அமைந்தன.

இந்த முறை வேறு கூட்டணியா
துப்பாக்கி படம் ரிலீசாகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகி உள்ள நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. ஆனால் இந்த முறை கலைப்புலி எஸ்.தாணுவிடம் இருந்து இந்த படத்தின் தயாரிப்பு உரிமத்தை சன் பிக்சர்ஸ் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் ஹீரோவாக நடிக்க உள்ள இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாசே இயக்க போகிறாரா அல்லது வேறு டைரக்டர் இயக்க போகிறாரா என தெரியவில்லை. பீஸ்ட் படத்திற்கு பிறகு விஜய்யின் மற்றொரு படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது.

எப்போ ஷுட்டிங் ஆரம்பம்
விஜய் தற்போது வம்சி பைடபள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாசும் பெரிய பட்ஜெட்டில் அனிமேஷன் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதனால் துப்பாக்கி 2 படம் எப்போது எடுக்கப்பட உள்ளது. யார் டைரக்டர் என்பது பற்றிய இன்னும் உறுதி செய்யப்படவில்லை. விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











