twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டைரக்டர் எங்கேப்பா?...’பீஸ்ட்’ எஸ்ஏசியின் ஓப்பன் டாக்... அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்

    |

    சென்னை : விஜய் நடித்த பீஸ்ட் படம் பல்வேறு நெகடிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திசேகர் பீஸ்ட் படம் பற்றி ஓப்பனாக கூறியுள்ள கருத்து பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி தியேட்டர்களில் ரிலீசானது. இந்த படம் விஜய் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்து விட்டதாக கூறப்படுகிறது. அதே சமயம் தீவிர விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும், மற்றவர்களிடம் நெகடிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது. பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் 2 படங்களை ஒப்பிட்டு பலர் கூறி கருத்து கூறி வருகிறார்கள்.

    இது தெரியாம போச்சே.. தொடர்ச்சியாக ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படம் பார்த்து கின்னஸ் படைத்த இளைஞர்!இது தெரியாம போச்சே.. தொடர்ச்சியாக ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படம் பார்த்து கின்னஸ் படைத்த இளைஞர்!

    அரபிக்குத்து வரை பிடித்தது

    அரபிக்குத்து வரை பிடித்தது

    இந்நிலையில் பீஸ்ட் படத்தை பார்க்க விஜய்யின் ரசிகனாக எல்லோரையும் போல் தானும் காத்திருப்பதாக சொன்ன விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திசேகர், பீஸ்ட் படத்தை பார்த்த பிறகு தனது கருத்தை ஓப்பனாக தெரிவித்தார். அதில் அவர், அரபிக் குத்து பாட்டு வரை பீஸ்ட் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது விஜய்யை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட ஒரு படமாக உள்ளது. தற்போதுள்ள இளம் இயக்குனர்கள், முதல் இரண்டு படங்களை கடின உழைப்பை கொடுத்து எடுத்து விடுகிறார்கள். அதன்பின் பெரிய நடிகர்களின் படங்கள் அவர்களுக்கு ஈஸியாக கிடைத்து விடுகின்றன.

    பீஸ்ட் சரியில்லாததற்கு காரணம்

    பீஸ்ட் சரியில்லாததற்கு காரணம்

    பெரிய ஹீரோ கிடைத்தவுடன் நாம் எப்படி வேண்டுமானாலும் படம் எடுத்துவிடலாம் என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள். 2 பாட்டு, 5 சண்டைக் காட்சிகள் வச்சி படம் பண்ணினால் போதும் என நினைக்கிறார்கள். படத்தை எப்படி எடுத்தாலும் ஹீரோவிற்காக படம் ஓடி விடும், ஹிட் ஆகி விடும் என நினைக்கிறார்கள். திரைக்கதை சரியாக அமைக்கப்படாதது தான் பீஸ்ட் சரியில்லாததற்கு காரணம். ஒரு இயக்குனர் நினைத்தால் திரைக்கதையில் தான் மேஜிக் பண்ண முடியும்.

    திரைகதையில் கோட்டை விடுகிறார்கள்

    திரைகதையில் கோட்டை விடுகிறார்கள்

    சர்வதேச அளவில் ஒரு கனமான விஷயத்தை படத்தில் சொல்ல வரும்போது அதற்காக இயக்குனர் ஆய்வு செய்ய வேண்டும். ஒரு ஹீரோ கிடைச்சிட்டாரு... ஷூட்டிங் போயிடலாம்னு இப்படிப்பட்ட கதையெல்லாம் படமாக்க முடியாது. இப்போதுள்ள இயக்குனர்கள் கதையை ஒரு லைனில் சொல்லி ஹீரோவிடம் ஓகே வாங்கி விடுகிறார்கள், ஆனால் திரைக்கதையில் கோட்டைவிட்டு விடுகின்றனர்.

    படத்தில் டைரக்டரையே காணோம்

    படத்தில் டைரக்டரையே காணோம்

    பீஸ்ட் படத்துல நான் பார்த்தது, ஒரு இசையமைப்பாளர் இருக்கிறார், ஒரு ஸ்டண்ட் மாஸ்டர் இருக்கிறார், ஒரு டான்ஸ் மாஸ்டர் இருக்கிறார், ஒரு எடிட்டர் இருக்கிறார், ஒரு ஹீரோ இருக்கிறார். ஆனால் இயக்குனர் மட்டும் இல்லை. டைரக்டர்கள் தங்களின் சொந்த ஸ்டைலில் படம் பண்ண வேண்டும். அதில் பொழுதுபோக்கிற்காக தேவையான சில விஷயங்களை சேர்க்க வேண்டும்.

    Recommended Video

    Beast VS KGF 2 | Box Office Collection | Filmibeat tamil
    ரசிகனாக திருப்தி அளிக்கவில்லை

    ரசிகனாக திருப்தி அளிக்கவில்லை

    விஜய்யோட ஸ்பெஷாலிட்டியே பாடல்களும், அவரது நடனமும் தான். அதனால் இயக்குனர் சீரியசான ஹைஜேக் சீனில் கூட காமெடிகளை புகுத்தி, பாடல்களை வைத்துள்ளார். பீஸ்ட் படம் பாக்ஸ் ஆபீசில் நல்ல வசூலை பெற்றுள்ளது. ஆனால் ஒரு ரசிகனாக எனக்கு திருப்தி அளிக்கவில்லை. " எனக் கூறியுள்ளார்.

    English summary
    After watching Beast movie, Vijay's father SAC shared his review about the movie. He said that as a fan, Beast wasn't satisfying. He enjoyed till the Arabic Kuthu song. But the film wasn't engaging after that song. Beast relies only on the star power of Vijay. Screenplay was not good in the movie. It was the only reason the movie was not coming well.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X