Don't Miss!
- News
மறைந்தது குயில்..பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்
- Sports
இந்தியாவுக்கு உள்ள ஒரே ஒரு சிக்கல்.. ஸ்டீவ் ஸ்மித்தை எப்படி வீழ்த்துவது.. இர்ஃபான் பதான் பலே யோசனை!
- Lifestyle
உங்கள் தலைமுடியில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!
- Finance
அதானி குழுமத்தில் 2 நிறுவனங்களுக்கு Negative ரேட்டிங்.. S&P குளோபல் அறிவிப்பு..!
- Automobiles
ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நாளை பீஸ்ட் ரிலீஸ்...விஜய்யின் அப்பா எஸ்ஏசி என்ன சொல்லிருக்கார் தெரியுமா ?
சென்னை : விஜய்யின் பீஸ்ட் படம் நாளை ரிலீசாக உள்ள நிலையில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், பீஸ்ட் படம் பற்றி பேசி உள்ள வீடியோ ஒன்று வெளியாகி செம டிரெண்டிங் ஆகி உள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் நாளை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. பீஸ்ட் ரிலீசை படக்குழுவினரும், ரசிகர்களும் வேற லெவலில் மாஸாக கொண்டாடி வருகின்றனர். சன் டிவி அடுத்தடுத்து ப்ரோமோக்களை வெளியிட்டு படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டி வருகிறது.
வீர ராகவனா? ராக்கி பாயா? மோதல் ஆரம்பம்...ட்ரெண்டாகும் veeraragavan ஹாஷ்டேக்!

பீஸ்ட் FDFS எப்போ
உலகம் முழுவதும் 5 மொழிகளில் பீஸ்ட் படம் நாளை ரிலீசாக உள்ளது. அமெரிக்காவில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ரிலீசாக உள்ளது. இந்தியாவில் நாளை காலை 4 மணிக்கு ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்டை் ஷோ திரையிடப்பட உள்ளது. மற்ற மொழிகளில் பீஸ்ட் என்ற பெயரிலும், இந்தியில் ரா என்ற பெயரிலும் இந்த படம் ரிலீசாக உள்ளது.

ஆஃபர்னா இப்படி இருக்கனும்
பீஸ்ட் ரிலீசை திருவிழாவாக கொண்டாடுவதற்காக புதுச்சேரியில் நடுக்கடலில் விஜய்யின் கட்அவுட்டை வைத்துள்ளார்கள் ரசிகர்கள். விஜய்யின் தீவிர ரசிகர்களாக வியாபாரிகள் சிலர் பீஸ்ட் படம் பார்ப்பவர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறார்கள். விருதுநகரில் ஒரு தியேட்டரில் பீஸ்ட் படத்தின் FDFS பார்க்க 5 டிக்கெட்கள் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என ஆஃபர் அறிவித்துள்ளனர்.

விஜய் அப்பா என்ன சொல்றார்
இந்நிலையில் விஜய்யின் அப்பா எஸ்ஏசி, பீஸ்ட் படம் பற்றி பேசி உள்ள வீடியோ வெளியாகி உள்ளது. அதில், நாளை பீஸ்ட் படம் ரிலீஸ். உங்களைப் போலவே நானும் காத்திருக்கிறேன் பீஸ்ட் படம் பார்க்க, விஜய் ரசிகனாக என பேசி உள்ளார். இந்த வீடியோ வெளியாகி செம டிரெண்டிங் ஆகி உள்ளது.
Recommended Video

அப்பா பற்றி விஜய் பேச்சு
இரண்டு நாட்களுக்கு முன் சன் டிவியில் ஒளிபரப்பான பேட்டியில் பேசிய விஜய்யிடம் அப்பா பற்றி கேட்டதற்கு, எல்லா அப்பாக்களும் மரத்தில் உள்ள வேர்கள் போன்றவர்கள். அவர்கள் செய்வது வெளியில் தெரியாது. அப்பா தெய்வத்திற்கு சமம் என பேசி இருந்தார். இந்த சமயத்தில் எஸ்ஏசி, தான் விஜய்யின் ரசிகனாக பீஸ்ட் பார்க்க காத்திருப்பதாக கூறி உள்ளது. விஜய் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.