»   »  மீண்டும் சர்ச்சையில் சிக்கியது விஜய்யின் 'கத்தி'

மீண்டும் சர்ச்சையில் சிக்கியது விஜய்யின் 'கத்தி'

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: விஜய் - முருகதாஸ் கூட்டணியில் வெளியான கத்தி திரைப்படம் தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறது.

தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றிப் படமாக மாறிய கத்தி படத்தின் கதை என்னுடையது என்று மீஞ்சூர் கோபி என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.

Vijay's Kaththi In Trouble Again For 'Stealing Story'

பின்னர் சமரச முயற்சிகளுக்குப் பின் கோபி தனது வழக்கை வாபஸ் பெற்றார்.இந்நிலையில் தற்போது கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கிற்கும் இதுபோன்ற ஒரு சிக்கல் எழுந்துள்ளது.

இந்தக் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் என்.நரசிம்ம ராவ் என்பவர் புகார் ஒன்றை தெலுங்கு எழுத்தாளர் சங்கத்தில் அளித்திருக்கிறார்.

அந்தப் புகாரில் இதன் உண்மையான கதை என்னுடையது தான். இதன் உண்மையான விவரங்கள் தெரியும் வரை இப்படத்தை எடுக்க நான் விடமாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

இந்தப் புகார் காரணமாக தற்போது கத்தி படத்தின் விவகாரம் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. சிரஞ்சீவி தனது 150 படமாக கத்தி படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Mega Star Chiranjeevi is all set to star in the remake of Tamil blockbuster Kaththi. But now Kaththi In Trouble Again For 'Stealing Story'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil