தளபதி செம ஸ்மார்ட்...பீஸ்ட் கெட்அப்பா...திடீரென வைரலாகும் விஜய் ஃபோட்டோ

சென்னை : கடந்த சில நாட்களாகவே சோஷியல் மீடியாவில் விஜய் - அஜித் பற்றிய தகவல்கள் தான் ஹாட் டாக்காக இருந்து வருகிறது. பிறந்த நாள், தளபதி 65 ஃபஸ்ட்லுக் மற்றும் டைட்டில் ரிலீஸ் என விஜய் பெயர் டிரெண்டிங் ஆனது. இதைத் தொடர்ந்து வலிமை பட ஃபஸ்ட்லுக் வெளியீட்டின் போது அஜித் பெயர் டிரெண்டிங் ஆனது.

வலிமை மோஷன் போஸ்டர் மற்றும் ஃபஸ்ட்லுக் வெளியிடப்பட்டதும் விஜய் - அஜித் ரசிகர்கள் புதுசு புதுசா ஹேஷ்டாக் உருவாக்கி டிரெண்டிங் ஆக்கினர். வழக்கம் போல் தங்கள் ஃபோவரைட் ஹீரோ தான் நம்பர் ஒன்று எனனும் விவாதம் நடைபெற்றது. இவற்றுடன் அஜித், விஜய் நடிக்கும் படங்களின் அப்டேட்களும் டிரெண்டிங் ஆனது.

விஜய்க்கு அபராதம் விதித்த கோர்ட்

விஜய்க்கு அபராதம் விதித்த கோர்ட்

இந்நிலையில் நேற்று சொகுசு காருக்கு வரி கட்டாத விவகாரம் தொடர்பாக விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனால் விஜய்க்கு ஆதரவாக ஒரு குரூப்பும், விஜய்க்கு எதிராக ஒரு குரூப்பும் ஹேஷ்டாக் உருவாக்கி, இரண்டையும் டிரெண்டிங் ஆக்கினர்.

வைரலாகும் விஜய் ஃபோட்டோ

வைரலாகும் விஜய் ஃபோட்டோ

விஜய் வரி கட்டினாரா, இல்லையா என்ற விவாதம் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, மற்றொரு புறம் விஜய்யின் ஸ்மார்ட்லுக் ஃபோட்டோ ஒன்று வெளியாகி, சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த ஃபோட்டோ எப்போது எடுக்கப்பட்டது என தெரியவில்லை.

தளபதி செம ஸ்மார்ட்

தளபதி செம ஸ்மார்ட்

தலையில் ஒன்றிரண்டு நரைத்த முடிகள், லேசாக நரைத்த தாடியுடன், கண்ணாடி அணிந்த விஜய்யின் ஃபோட்டோ தான் வைரலாகி வருகிறது. பேக்கிரவுண்டில் பாலைவனம் போன்ற லொகேஷன் உள்ளது. இதனால் இது பீஸ்ட் படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்டதா, பீஸ்ட் கெட்அப் லுக்கா இது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

பீஸ்ட் கெட்அப்பா தலைவா

பீஸ்ட் கெட்அப்பா தலைவா

எப்படி இருந்தாலும் இந்த ஃபோட்டோவை வைரலாக்கி, விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். "இவருக்கு மட்டும் வயசு ரிவர்சில் போகிறதா ?" என்று கூட சிலர் கமெண்ட் செய்துள்ளனர். இந்த ஃபோட்டோ வெளியான சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கில் லைக்குகள் குவிந்து வருகிறது.

Recommended Video

Stalin Sir ரொம்ப Handsome - விஜயை நான் தளபதியா பாக்கல | Actress Vanitha Chat | Filmibeat Tamil
 விரைவில் பீஸ்ட் படப்பிடிப்பு

விரைவில் பீஸ்ட் படப்பிடிப்பு

விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்டமாக சென்னையில் பிரம்மாண்ட செட்டில் பாடல் காட்சி விரைவில் படமாக்கப்பட உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X