»   »  'ஒத்த சொல்லால' தெறியில் லுங்கி டான்ஸ் ஆடிய விஜய்.. ரசிகர்கள் உற்சாகம்

'ஒத்த சொல்லால' தெறியில் லுங்கி டான்ஸ் ஆடிய விஜய்.. ரசிகர்கள் உற்சாகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று வெளியாகியிருக்கும் தெறி படத்தில் விஜய் 'ஒத்த சொல்லால' பாடலுக்கு லுங்கி டான்ஸ் ஆடி கலக்கியிருக்கிறார்.

விஜய், சமந்தா, எமி ஜாக்சன், நைனிகா மற்றும் பல நட்சத்திரங்கள் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் தெறி.


Vijay's Lungi Dance in Theri

வேறு எந்தப் படமும் வெளியாகாத நிலையில் சோலோவாக வெளியாகியிருக்கும் தெறி, விஜய் ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.


விஜய்யின் வசனங்கள், டான்ஸ், நைனிகா ஆகியவை தவிர படத்தில் இடம்பெற்ற விஜய்யின் 'லுங்கி டான்ஸ்' ரசிகர்களுக்கு மற்றுமொரு ட்ரீட்டாக அமைந்துள்ளது.


வழக்கமாக விஜய் படங்கள், பாடல்கள் போன்றவைகளை வளரும் நடிகர்கள் தங்கள் படங்களுக்கு பயன்படுத்திக் கொள்வர்.ஆனால் வித்தியாசமாக இந்தப் படத்தில் ஆடுகளம் படத்தில் தனுஷ் ஆடிய 'ஒத்த சொல்லால' பாடலுக்கு, விஜய் லுங்கி அணிந்து ஆடியிருக்கிறார்.


இதனால் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி தனுஷ் ரசிகர்களும், விஜய்யின் டான்ஸை போட்டிபோட்டு இணையத்தில் பரப்பி வருகின்றனர்.


English summary
Vijay Lungi Dance for 'Otha Sollala' in Theri Movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil