»   »  சீட்டுகளை தெறிக்க விடும் விஜயின் ‘மெர்சல்’ 2-வது போஸ்டர் வெளியானது!

சீட்டுகளை தெறிக்க விடும் விஜயின் ‘மெர்சல்’ 2-வது போஸ்டர் வெளியானது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் நடித்து வரும் 61வது படத்தின் தலைப்பு வெளியாகிய நிலையில் தற்போது இரண்டாவது போஸ்டரை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது.

தெறி படம் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீ, விஜய் மீண்டும் இணைந்துள்ள படம் விஜய் 61. படத்தில் விஜய் அப்பா, 2 மகன்கள் என்று மூன்று கதாபாத்திரங்களில் வருகிறார். அப்பா விஜய்க்கு நித்யா மேனன் ஜோடியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

vijay's mersal movie 2nd poster released by Sri Thenandal Films

மிகப்பெரிய பொருட்செலவில் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. அட்லீயின் கதை, திரைக்கதை வசனத்தில் உருவாகும் இப்படம் சென்னையில் பிரம்மாண்டமான செட்கள் அமைத்து உருவாக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக இருக்கும் இப்படத்தின் காட்சிகள் இந்தியா மட்டுமல்லாது ஐரோப்பிய நாடுகளிலும் எடுக்கப்பட்டு படாமாக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே விஜய் தனது 43வது பிறந்தநாளை இன்று கொண்டாட உள்ளார். இதனை முன்னிட்டு முன்னதாக விஜய் 61வது படத்திற்கு "மெர்சல்" என்ற தலைப்பை நேற்று மாலை 6 மணிக்கு வெளியிட்டது படக்குழு.

அதைத் தொடர்ந்து படத்தின் பெயர் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே #Mersal என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டாப் 10 ட்ரெண்டிங்கில் வந்தது. அதோடு விஜய்யின் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பாராட்டியும், விஜய்க்கும் வாழ்த்து தெரிவித்தும் சினிமா பிரபலங்கள் தங்களது கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு சரியாக 12 மணிக்கு இந்தப் படத்தின் இரண்டாவது போஸ்டரை வெளியிட்டு தேனாண்டாள் பிலிம்ஸ் தெறிக்கவிட்டுள்ளது.

English summary
actor vijay,s birthday special mersal second poster released by Sri Thenandal Films

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil