Don't Miss!
- Sports
எங்கள் இனிய நாளை கெடுத்து விடாதீர்கள்.. மன வேதனையாக இருக்கு.. திருமணமான முதல் நாளே ஆப்ரிடி டிவிட்
- News
டெல்லி விமான நிலையத்தில் கேன்சர் பாதித்த பெண் பயணியை இறக்கிவிட்ட அமெரிக்க விமானம்.. காரணம் என்ன?
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அடுத்த லெவலுக்கு நகரும் தளபதி படம்... இந்தியில் டப்பாகும் மெர்சல்
சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் மெர்சல்.
அட்லி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் சிறப்பான வசூல் சாதனையை படைத்தது.
விஜய் 3 வேடங்களில் நடித்திருந்த இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார் ஏஆர் ரஹ்மான்.
குவியும் குத்தாட்ட வாய்ப்புகள்.. இன்னும் பல கோடிகளை அதிரடியாக ஏற்ற நடிகை.. அப்படி ஆடவும் ரெடியாம்?

மெர்சல் படம்
நடிகர் விஜய் லீட் கதாபாத்திரத்தில் நடித்து வெளியான மெர்சல் படத்தில் அவர் மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்த நிலையில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு உள்ளிட்டவர்களும் படத்தில் நடித்திருந்தனர்.

அட்லி இயக்கம்
இந்தப் படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்தப் படம் கடந்த 2018ம் ஆண்டிற்கான சிறந்த அயல்நாட்டு படம் என்ற விருதை பிரிட்டன் தேசிய திரைப்பட விழாவில் பெற்றது. அட்லி இயக்கத்தில் அடுத்தடுத்த படங்களில் நடித்த விஜய்க்கு இந்தப் படமும் சிறப்பான வெற்றிப் படமாக அமைந்தது.

வசூல் மழை பொழிந்த மெர்சல்
இதையடுத்து மாஸ்டர் படத்தில் விஜய் நடித்து முடித்தாலும் மெர்சல் படத்திற்கு இன்றளவும் ரசிகர்கள் சிறப்பான ஆதரவை கொடுத்து வருகின்றனர். இந்தப் படம் வசூல் மழையையும் பொழிந்த நிலையில், தற்போது இந்தப் படம் இந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பான் இந்தியா படங்கள்
பாகுபதி, கேஜிஎஃப் படங்களின் வெற்றியால் பான் இந்தியா படங்களில் நடிக்க நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். விஜய்யின் 66வது படம் பான் இந்தியா படமாக உருவாகவுள்ளது. தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களின் படங்களும் பான் இந்தியா படங்களாக வெளியாக உள்ளன.

வசூலை குவித்த புஷ்பா படம்
சமீபத்தில் அல்லு அர்ஜூனின் புஷ்பா படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. வசூலையும் வாரிக் குவித்துள்ளன. இதையடுத்து அவரது அலா வைகுந்தபுரமுலு படத்தையும் இந்தியில் டப் செய்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மெர்சல் இந்தியில் வெளியீடு
இந்நிலையில், விஜய்யின் மெர்சல் படத்தையும் இந்தியில் டப் செய்து அடுத்த மாதத்தில் திரையரங்கில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல ராம்சரணின் ரங்கஸ்தலம் படத்தையும் அடுத்த மாதத்தில் டப் செய்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.