»   »  விஜய்யின் புலி... ஆகஸ்டில் ஆடியோ... செப்டம்பரில் ரிலீஸ்!

விஜய்யின் புலி... ஆகஸ்டில் ஆடியோ... செப்டம்பரில் ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஏக எதிர்ப்பார்ப்புக்கிடையே விஜய் நடித்துள்ள புலி படத்தின் இசை வெளியீடு வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடக்கும் என்றும், படத்தை செப்டம்பரில் விஜயதசமி ஸ்பெஷலாக வெளியிடப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

புலி படத்தின் டப்பிங், ரீரிக்கார்டிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன.


இதில் நாயகிகளாக சுருதிஹாசன், ஹன்சிகா நடித்துள்ளனர். முன்னாள் கதாநாயகி ஸ்ரீதேவியும் ராணி கேரக்டரில் வருகிறார். சிம்புதேவன் இயக்கியுள்ளார்.


45 லட்சம் பேர்

45 லட்சம் பேர்

இதன் டிரெய்லர் சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. 45 லட்சம் பேர் இதுவரை ட்ரைலர் பார்த்துள்ளனர். 10 ஆயிரம் பேருக்கு இது பிடிக்கவில்லையாம்.


இசை எப்போ?

இசை எப்போ?

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீடு எப்போது என ஆவலுடன் காத்திருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். விஜய் பிறந்த நாளன்றுதான் இசை வெளியிட முதலில் உத்தேசித்திருந்தனர். இப்போது ஆகஸ்டில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.


படம்

படம்

படத்தை செப்டம்பர் மாதம் விஜயதசமிக்கு வெளியிடுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர். தீபாவளிக்கு நிறைய பெரிய படங்கள் வரவிருப்பதால் இப்படி முடிவெடுத்துள்ளார்களாம்.


விஜய்க்கு இது முதல் பரிசோதனை

விஜய்க்கு இது முதல் பரிசோதனை

விஜய்யைப் பொருத்தவரை இந்தப் படம் ஒரு சோதனை முயற்சி. காரணம் அவர் நடித்துள்ள முதல் சரித்திரப் பின்னணி கொண்ட கற்பனைக் கதை இது.


English summary
The audio of Vijay's Puli will be releasing in August and the movie is going to release on Vijayadasami day.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil