»   »  ரசிகர்களின் பார்வையில் "புலி ப்ரோமோ சாங்"

ரசிகர்களின் பார்வையில் "புலி ப்ரோமோ சாங்"

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சற்று நேரத்திற்கு முன்பு விஜயின் "புலி" ப்ரோமோ சாங்கை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் புண்ணியத்தை கட்டிக் கொண்டிருக்கிறார் ராக் ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத்.

நேற்று நள்ளிரவில் வெளியாகவிருந்த பாடலை தொழில்நுட்பக்கோளாறு காரணமாக வெளியிட முடியவில்லை என்று கூறி ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் தேவி ஸ்ரீ பிரசாத்.

இன்று 12(நண்பகல்) மணியளவில் பாடல் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தனர். அதன்படி சற்று நேரத்திற்கு முன்பு புலி படத்தின் ப்ரோமோ சாங்கை வெளியிட்டார் தேவி ஸ்ரீ பிரசாத்.

ரசிகர்களின் பார்வையில் புலி படத்தின் ப்ரோமோ பாடல் எப்படி இருக்கின்றது என்பதை இங்கே பார்க்கலாம்.

இதுக்கா அவ்ளோ பெரிய பிராப்ளம்

"இத(புலி ப்ரோமோ சாங்) காமிக்கிறதுக்கா அவ்வளவு பெரிய டெக்னிக்கல் பிராப்ளம் வந்துச்சு, DSP அண்ணா நீங்க நல்லா வருவீங்கண்ணே" என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார் அவதார்.

ஆந்திராவுக்கே போயிடுங்க ப்ளீஸ்

"ஐயா ராக் ஸ்டார் டிஎஸ்பி அவர்களே நீங்க திரும்ப ஆந்திராவுக்கே போயிடுங்க... எங்களாள முடியல" என்று பாடலைப் பார்த்து டிஎஸ்பியிடம் அன்புக் கோரிக்கை வைத்திருக்கிறார் சுதர்சன் கார்த்திக்.

சாங்ஸ் சூப்பர்

"புலி ப்ரோமோ சாங் சூப்பர்" என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார் வாசுதேவா.

புலியே பொறாமைப்படும்

"புலி ப்ரோமோ சாங்கைஐ, பார்த்து புலியே பொறாமைப்படும், அந்த அளவிற்கு பாடல் உள்ளது". என்று தனது எட்டாவது அறிவைப் பயன்படுத்தி கருத்துத் தெரிவித்திருக்கிறார் ராஜா.

டிஎஸ்பிக்கு பாட்டு இல்லாம

"கந்தசாமி, மன்மதன் அம்பு, சிங்கம்ன்னு மியூசிக் பண்ற முக்கால்வாசி படங்கள்ல DSP தனக்குன்னு ஒரு பாட்டு வைத்துக் கொள்கிறார்" என்று டிஎஸ்பியின் திறமையைக் கண்டு வியந்திருக்கிறார் கோகிலா.

டிஎஸ்பி ஆட்டம்

"DSP உன்னோட ஆட்டத்துக்கு ஒண்ணும் குறைச்சலில்லை".. என்று புலி ப்ரோமோ பாடலில் டிஎஸ்பியின் ஆடலைப் பாராட்டியிருக்கிறார் பில்லா சஜி.

ஒரு பாவமும் அறியாத

"உனக்கு என்னடா பாவம் பண்ணோம் நாங்க , ஒழுங்கா ஓடி போய் வேற ப்ரொமோ சாங் ரிலீஸ் பண்ணிடு" என்று டிஎஸ்பியை திட்டியிருக்கிறார் பராசக்தி ஹீரோ.

இவ்வாறு ரசிகர்கள் பலரும் புலி ப்ரோமோ பாடலைக் குறித்து தொடர்ந்து தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

English summary
Vijay's 'Puli' Promo Song Released - Fans Twitter Comments.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil