»   »  வந்துருச்சு 'ஏண்டி ஏண்டி'.. விஜய்யும், ஸ்ருதியும் இணைந்து பாடிய புலிப் பாட்டு!

வந்துருச்சு 'ஏண்டி ஏண்டி'.. விஜய்யும், ஸ்ருதியும் இணைந்து பாடிய புலிப் பாட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புலி படத்திற்காக நடிகர் விஜய் நடிகை சுருதிஹாசன் இணைந்து பாடிய ஏண்டி ஏண்டி பாடலின் டீசர் சற்று முன்பு வெளியானது.

மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப் பட்டிருக்கும் புலி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.


ஏற்கனவே விஜயின் பிறந்த நாள் பரிசாக புலி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. அந்த வரிசையில் தற்போது வெளியாகி உள்ள ஏண்டி ஏண்டி பாடலின் டீசரும் இடம்பிடித்துள்ளது.தீசரின் ஆரம்பத்தில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் பாடலைப் பற்றி ஒருசில வார்த்தைகள் பேசுவது போல ஆரம்பித்து, தொடர்ந்து விஜய் பாடுவது போன்றும் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பது போன்றும் டீசர் உள்ளது.


பாடல் வரிகள் காட்சிகளாக விரிய( வீடியோ இல்லை) பின்னணியில் நடிகர் விஜயின் குரலும் சுருதிஹாசன் குரலும் ஒலிக்கின்றது, இடையில் கவிஞர் வைரமுத்துவின் புகைப்படம் மற்றும் விஜய், சிம்புதேவன், தேவிஸ்ரீ பிரசாத் நிற்பது போன்ற படங்கள் வந்து செல்கின்றன.


காதலியின் நினைவு வாட்டுவதாக காதலன் உருகிப் பாடுவது போன்று அமைந்து, இருக்கும் இந்தப்பாடல் கண்டிப்பாக இந்த வருடத்தின் ஹிட் பட்டியலில் இடம்பெறும் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.


தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்ற ஏண்டி ஏண்டி இப்படிப் பண்ணுற பாடலின் டீசரை, ரசிகர்கள் பலரும் சமூகவலைதளங்களில் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

English summary
Vijay's 'Puli' Song ('Yaendi Yaendi') Teaser Now Released. It is a romantic song that has been crooned by Ilayathalapathy Vijay and Shruti Haasan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil