»   »  "புலி" யின் 2 வது டிரெய்லர் ரிலீஸானது...

"புலி" யின் 2 வது டிரெய்லர் ரிலீஸானது...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் நடிப்பில் உருவான புலி திரைப்படம் அக்டோபர் 1 ம் தேதி உலகெங்கும் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் படத்தின் 2 வது டிரெய்லர் சற்று முன்பு வெளியானது.

விஜய், சுருதிஹசன், ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள பேண்டசி திரைப்படம் ‘புலி'. இப்படத்தை சிம்புதேவன் இயக்கியுள்ளார். ஸ்ரீதேவி கபூர், சுதீப், பிரபு, வித்யுலேகா ராமன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


இப்படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், வருகிற அக்டோபர் 1-ந்தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.ஏற்கெனவே, வெளியான இப்படத்தின் முதல் டிரெய்லர் கடந்த மாதம் வெளியாகி பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளது. புலி படத்தின் முதல் டிரெய்லரை விட புலி படத்தின் 2 வது டிரெய்லர் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


புலி படத்தின் புதிய (2வது) டிரெய்லர் இதுதான் என்று நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் டிரெய்லரை வெளியிட்டிருக்கிறார்.


இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். நட்டி நடராஜ் ஒளிப்பதிவு அமைத்துள்ளார். எஸ்.கே.டி.ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் பி.டி.செல்வகுமார், சிபு தமீன்ஸ் இருவரும் இணைந்து "புலி"யைத் தயாரித்திருக்கின்றனர்.

Read more about: vijay, puli, விஜய், புலி
English summary
Vijay's Puli will hit the screens on the 1st of October. The latest we hear is that the team is planning to release another one minute long trailer of Puli before the release of the film.Apparently the second trailer will be unveiled today at 7.30 PM.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil