அடேய் என்னடா பண்ணி வச்சிருக்கீங்க... ராக்கம்மா கையத்தட்டு ரஜினி எப்போ ரஞ்சிதமே பாட்டுல வந்தாரு?

சென்னை: விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' நவம்பர் 5ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இந்தப் பாடலின் இன்னொரு வெர்ஷனை நடிகர் சதீஷ் தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 ட்ரெண்டான ரஞ்சிதமே ரஞ்சிதமே

ட்ரெண்டான ரஞ்சிதமே ரஞ்சிதமே

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்துக்கு ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. தில் ராஜூ தயாரிப்பில் முதன்முறையாக இயக்குநர் வம்ஷி பைடிபல்லியுடன் கூட்டணி வைத்துள்ள விஜய், இந்தப் படத்தில் ஸ்டைலிஷான கேரக்டரில் நடித்துள்ளார். விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்தப் படத்தில், மேலும் பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் 5ம் தேதி வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரஞ்சிதமே ரஞ்சிதமே வெளியானது. தமன் இசையில் விஜய் பாடியிருந்த இந்தப் படல், யூடியூப்பில் பல மில்லியன் வீவ்ஸ்களை கடந்து புதிய சாதனை படைத்தது.

 சதீஷ் வெளியிட்ட புது வெர்ஷன்

சதீஷ் வெளியிட்ட புது வெர்ஷன்

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதேநேரம் பழைய பாடல்களின் மெட்டை காப்பி செய்து ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலுக்கு மியூசிக் கம்போஸ் செய்துவிட்டார் என தமனை நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். இந்நிலையில், நடிகர் சதீஷ் இந்தப் பாடலின் இன்னொரு வெர்ஷனை வெளியிட்டு ட்ரெண்டாக்கியுள்ளார். அதில், "அடப்பாவிகளா அநியாயமா சிங்க் பண்றீங்களே" என பதிவிட்டுள்ள அவர், ரஞ்சிதமே பாடலுக்கு ரஜினி டான்ஸ் ஆடும் வீடியோவை ஷேர் செய்துள்ளார்.

 விஜய்க்கு டஃப் கொடுத்த தலைவர்

விஜய்க்கு டஃப் கொடுத்த தலைவர்

ரஞ்சிதமே பாடலின் ஒரிஜினல் வெர்ஷனில் விஜய் தனது வழக்கமான அதிரிபுதிரியான டான்ஸில் கலக்கியிருந்தார். ஆனால், சதீஷ் வெளியிட்டுள்ள வீடியோவில், விஜய்க்கே டஃப் கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் இளையராஜா இசையில் ஹிட்டடித்த பாடல் ராக்கம்மா கைய தட்டு. இதில் ரஜினியின் டான்ஸ் இப்போதும் அவரது ரசிகர்களுக்கு ஸ்பெஷலாக உள்ளது. இந்நிலையில், ராக்கம்மா கைய தட்டு பாடலில் ரஜினி ஆடிய டான்ஸை, அப்படியே தூக்கி ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலுக்கு மேட்ச் செய்துள்ளனர் ரசிகர்கள்.

 பத்து பொருத்தமும் பக்காவா பொருந்துதே

பத்து பொருத்தமும் பக்காவா பொருந்துதே

ரஞ்சிதமே பாடலின் பல்லவி, கோரஸ், டன்ஸ் பீட் என எல்லா இடத்திலும் ரஜினியின் ராக்கம்மா கைய தட்டு நடனம் பக்காவாக பொருந்தியுள்ளது இந்த வீடியோவை விஜய் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர். அதேபோல் சதீஷின் டிவிட்டரிலும் ஏராளமான ரசிகர்கள் இந்த ரஜினின் வெர்ஷனை பாராட்டி கமென்ட்ஸ் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X