»   »  வாரிசுகளுடன் 'தெறி'யில் களமிறங்கும் விஜய்

வாரிசுகளுடன் 'தெறி'யில் களமிறங்கும் விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை வெளியாகப் போகும் தெறி திரைப்படத்தில், விஜய்யின் மகன் சஞ்சய் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

விஜய், சமந்தா, நைனிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தெறி. அட்லீ இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, தாணு தயாரித்திருக்கிறார்.


இந்நிலையில் விஜய்யின் மகன் சஞ்சய் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Vijay's Son Guest Appearence in Theri

ஏற்கனவே விஜய்யின் மகள் திவ்யா இப்படத்தில் அவருடைய மகளாக நடித்திருக்கிறார். தற்போது மகன் சஞ்சயும் படத்தில் நடித்திருப்பது விஜய் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சில ஆண்டுகளுக்கு முன் விஜய் நடிப்பில் வெளியான 'வேட்டைக்காரன்' படத்தில் சஞ்சய் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.


தற்போது தன்னுடைய 59 வது படமான தெறியில் மகன், மகள் என இருவருடனும் விஜய் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources Said Vijay's Son Sanjay Guest Appearance in Theri.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil