»   »  இந்த விஜய் எப்பவுமே இப்படித்தாங்க!

இந்த விஜய் எப்பவுமே இப்படித்தாங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் ரசிகர்கள் ரொம்பவே எதிர்ப்பார்க்கும் படம் மெர்சல். காரணம் முந்தைய படங்களைவிட இந்தப் படத்தில்தான் விஜய்யின் தோற்றமும் படத்தின் தலைப்பும் நிஜமாகவே மெர்சலாக உள்ளன. இன்னொன்று முதல் முறையாக விஜய் இதில் ஜல்லிக்கட்டுக் காளையனாக வேறு வருகிறார். எனவேதான் இந்த எக்கச்சக்க எதிர்ப்பார்ப்பு.

தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்க, அட்லி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படம் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது.

இன்ப அதிர்ச்சி

இன்ப அதிர்ச்சி

விஜய் நடிக்க வேண்டிய காட்சிகள் முழுவதுமாக எடுத்து முடிக்கப்பட்டு விட்டன. நடித்து முடித்தோமா... அடுத்த படத்துக்குப் போனோமா என்று நிற்கவில்லை விஜய். தன் படக்குழுவுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

தங்கம்

தங்கம்

'மெர்சல்' படக்குழுவினருக்கு தங்க நாணயங்களைப் பரிசாக வழங்கி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்.

பரிசு - வாழ்த்து

பரிசு - வாழ்த்து

விஜய் எப்போதுமே தனது புதிய படம் முடியும் தறுவாயில் படக்குழுவினரை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்குவது வழக்கம். அதுவும் தன் கையாலேயே விருந்தளித்து, இந்த மாதிரி பரிசுகளைக் கொடுத்து அசத்துவார்.

அதை மெர்சல் படத்திலும் கடைப்பிடித்து, பல உள்ளங்களின் வாழ்த்துக்களைப் பெற்றிருக்கிறார்.

ஆகஸ்ட் 20

ஆகஸ்ட் 20

'மெர்சல்' படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாதம் வெளியாகிறது.

English summary
Vijay has gave a surprise gift to all his Mersal team members.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil