twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தடைகளைத் தகர்த்து தெலுங்கிலும் தடம்பதிக்க வருகிறார் தளபதி! -நவம்பர் 9-ல் 'அதிரிந்தி' ரிலீஸ்?

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : விஜய் நடித்த 'மெர்சல்' தமிழில் செமையாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் உலகம் முழுவதும் ரூ. 20௦ கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது.

    தமிழில் 'மெர்சல்' படம் ரிலீஸுக்கு முன்பு சிக்கல்களைச் சந்தித்தது போலவே தெலுங்கு மெர்சலான 'அதிரிந்தி' படமும் சென்சார் பிரச்னையால் ரிலீஸ் தள்ளிப்போனது.

    இந்த நிலையில் மெர்சல் படத்தின் தெலுங்கு வெர்சன் 'அதிரிந்தி' வரும் நவம்பர் 9-ம் தேதி ரிலீஸாக இருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. தெலுங்கு ரசிகர்களும் மெர்சலாகக் கொண்டாடக் காத்திருக்கிறார்கள்.

    மெர்சல் வெறித்தன வசூல்

    மெர்சல் வெறித்தன வசூல்

    அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் பல தடைகளைக் கடந்து தீபாவளிக்கு வெளியானது 'மெர்சல்' திரைப்படம். ரசிகர்களின் பலத்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்து ஓடிக்கொண்டிருக்கிறது 'மெர்சல்'. ஆனால், ரிலீஸுக்கு ஒரு நாள் முன்னதாகத்தான் சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதனால், படம் தீபாவளியன்று வெளிவருமா வராதா என்ற பரபரப்பு இருந்தது.

    200 கோடி வசூல்

    200 கோடி வசூல்

    படம் வெளிவந்த பின்னரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் மிகப் பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. விஜய்யின் மெர்சல் படம் சர்ச்சைகளுக்கு நடுவே ரூ. 200 கோடி வசூலித்துள்ளது. 'மெர்சல்' படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் படத்திற்கு விலையில்லா விளம்பரம் செய்து பா.ஜ.க-வினர் படத்தை பெரிய வெற்றிபெறச் செய்துள்ளனர்.

    மெர்சல் வசன சர்ச்சை

    மெர்சல் வசன சர்ச்சை

    'மெர்சல்' படத்தில் விஜய் பேசிய வசனங்கள் பா.ஜ.க-வினரால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. குறிப்பிட்ட காட்சிகளை நீக்கினால்தான் படத்தைத் தொடர்ந்து திரையிட முடியும் என எச்சரிக்கப்பட்டது. ஆனால், இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பொதுமக்களும், கருத்து சுதந்திரத்தைப் பறிக்கும் முயற்சி என பா.ஜ.க-வினருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

    தெலுங்கில் ரிலீஸ் ஆகவில்லை

    தெலுங்கில் ரிலீஸ் ஆகவில்லை

    தமிழில் இப்படம் வெளிவரும் அன்றே தெலுங்கிலும் வெளிவரும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தெலுங்கு சென்சார் வேலைகள் முடிவடையாததால் தீபாவளியன்று படம் தெலுங்கில் வெளியாகவில்லை. அதனால், அக்டோபர் 27-ம் தேதி வெளியாகலாம் என்று முன்பு கூறப்பட்டது. ஆனால், சென்சார் க்ளியர் செய்யப்படாததால் ரிலீஸ் தள்ளிப்போனது.

    அதிரிந்தி எதிர்பார்ப்பு

    அதிரிந்தி எதிர்பார்ப்பு

    அதோடு 'மெர்சல்' படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றிருந்த தகவல் பரவியதை அடுத்து தெலுங்கில் அதிகப்படியான தியேட்டர்களில் படத்தை வெளியிடவும் தயாரானார்கள். இதனால் 'மெர்சல்' படத்தின் தெலுங்கு பதிப்பான 'அதிரிந்தி' படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

    சென்சார் சான்றிதழ் ஓகே

    சென்சார் சான்றிதழ் ஓகே

    தற்போது தெலுங்கு 'மெர்சல்' படமான 'அதிரிந்தி' படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது. இதை தேனாண்டாள் பிலிம்ஸ் சி.இ.ஓ ஹேமா ருக்மணி நேற்று ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். மேலும் படம் கூடிய விரைவில் ரிலீஸாகும் என்றும் கூறியிருக்கிறார்.

    நவம்பர் 9 ரிலீஸ்

    நவம்பர் 9 ரிலீஸ்

    அதன்படி, நவம்பர் 9-ம் தேதி படம் வெளியாக இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் 'அதிரிந்தி' படம் வெளியாக உள்ளது. தமிழில் மிகப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதால் தெலுங்கிலும் அதே போலவே கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    அங்கும் சர்ச்சை வெடிக்குமா

    அங்கும் சர்ச்சை வெடிக்குமா

    தமிழில் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய பணமதிப்பிழப்பு விவகாரம், ஜி.எஸ்.டி வசனம் ஆகியவை தெலுங்கில் இடம் பெற்றுள்ளதா என்பது குறித்து இன்னும் தகவல் வரவில்லை. தமிழில் ஏற்பட்ட சர்ச்சையால் தெலுங்கில் இப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளார்கள் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    வசூலை அள்ளிவிடலாம்

    வசூலை அள்ளிவிடலாம்

    தமிழில் வெளிவந்த 'மெர்சல்' படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் படத்திற்கு விலையில்லா விளம்பரம் செய்து படத்தை பெரிய வெற்றிபெறச் செய்ததைப் போல, ஆந்திரா, தெலுங்கானாவைச் சேர்ந்த பா.ஜ.க-வினரும் கிளம்பினால் அங்கும் வசூலை அள்ளிவிடலாம் என எதிர்பார்க்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

    English summary
    The Telugu Mersal 'adhirindhi' film was also relegated by Sensor Problems, as the Tamil film 'Mersal' had problems before the release. The film is currently being U/A certified by censor board. 'Adhirindhi' film will be released on coming November 9 in Telangana and andhra.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X