விஜய்யின் தளபதி 66 டைட்டில் இது தான்... சீக்ரெட்டை போட்டுடைத்த தெலுங்கு மீடியாக்கள்
சென்னை : பீஸ்ட் படத்தை தொடர்ந்து தெலுங்கு டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார் விஜய். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து வருகிறார். தமன் இசையமைக்கிறார்.
தளபதி 66 படத்தின் ஷுட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. ஏப்ரல் 6 ம் தேதி பூஜையுடன் துவங்கப்பட்டு, ஆரம்ப கட்டமாக சென்னையில் ஒரு சில நாட்கள் ஷுட்டிங் நடத்தப்பட்டது. பிறகு ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் ஷுட்டிங் நடத்தப்பட்டது.
ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், பிரபு, யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த், சங்கீதா கிருஷ், சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படம் குடும்ப சென்டிமென்ட் படம் என ஆரம்பத்திலேயே தில் ராஜு கூறி விட்டார். நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் இது போன்ற ரோலில் நடிக்கிறார் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இரட்டை வேடத்தில் விஜய்
இதில் மற்றொரு தகவலாக, தளபதி 66 படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இரண்டுமே ஸ்டிராங்கான கேரக்டர். இரு கேரக்டர்களுக்குமே தனித்தனியாக பிளாஷ்பேக் மற்றும் சென்டிமென்ட் சீன்கள் வைக்கப்பட்டுள்ளன என சொல்லப்படுகிறது. இதில் ஒரு விஜய் கேரக்டர், இரண்டு குழந்தைகளுக்கு அப்பா ரோல் என்றும் சொல்லப்படுகிறது.

இவங்களும் இருக்காங்க
தளபதி 66 படத்தில் தெலுங்கு டாப் ஹீரோ மகேஷ் பாபு கெஸ்ட் ரோல் செய்கிறார் என்ற தகவலும் சமீப நாட்களாக சோஷியல் மீடியாவில் உலா வருகிறது. அதே போல் இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருப்பதாகவும், ராஷ்மிகா மட்டுமின்றி மெஹ்ரின் பிர்சோடாவும் மற்றொரு ஹீரோயின் ரோலில் நடிக்கிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

விஜய் பிறந்தநாளில் ஃப்ர்ஸ்ட் லுக்
தளபதி 66 படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு தான் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜுன் 21 ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான போட்டோஷுட் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.

பிறந்தநாள் ட்ரீட்டா டைட்டில் வருமா
ஃபர்ஸ்ட் லுக் வரும் தேதி தெரிந்து விட்டதால், ஃபர்ஸ்ட் லுக்குடன் படத்தின் டைட்டிலையும் அறிவிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த ஆண்டு விஜய் பிறந்தநாளில் பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டருடன் படத்தின் டைட்டிலையும் வெளியிட்டது சன் பிக்சர்ஸ். அதே முறையை தளபதி 66 டீமும் கடைபிடிக்கலாம் என சொல்லப்படுகிறது.

பிளானை மாற்றிய டைரக்டர் வம்சி
தளபதி 66 படத்தின் ஷுட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் சில சீன்களின் வீடியோக்கள், போட்டோக்கள் வெளியில் கசிந்ததால் ரசிகர்கள் செம கடுப்பாகி உள்ளனர். இதனால் வெளியில் கசிந்த சீன்களை மீண்டும் வேறு மாதிரி படமாக்க டைரக்டர் வம்சி பைடபள்ளி திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

தளபதி 66 டைட்டில் இதுதான்
லேட்டஸ்ட் தகவலாக விஜய்யின் பிறந்தநாளன்று தளபதி 66 படத்தின் டைட்டிலையும் படக்குழு வெளியிட உள்ளதாம். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் தளபதி 66 படத்தின் தெலுங்கு வெர்சனுக்கு 'வாரசுடு' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாம். அதாவது தமிழில் வாரிசு என்ற அர்த்தம் வரும் வகையில் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழில் தளபதி 66 படத்திற்கு வாரிசு என டைட்டில் வைக்க வாய்ப்புள்ளதாக தெலுங்கு மீடியாக்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
Recommended Video

இப்படி ஒரு தகவலும் இருக்கா
வாரிசுடு என்ற டைட்டில் 1993 ம் ஆண்டு நாகர்ஜுனா நடித்த ஒரு படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டிலாம். பிறகு அதை மாற்றி விட்டு, வேறு டைட்டில் வைத்து விட்டார்களாம். இதனால் இந்த டைட்டிலை சென்டிமென்ட் படமான தளபதி 66 படத்திற்கு வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதலில், கா என்ற எழுத்தில் துவங்கும் விஜய்யின் கேரக்டர் பெயரை தான் படத்திற்கு டைட்டிலாக வைக்க முடிவு செய்திருந்தார்களாம். பிறகு சென்டிமென்ட் கதை என்பதால் இந்த டைட்டில் சரியாக இருக்கும் என்று மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











