Don't Miss!
- News
"கூவாத சேவல்".. கிலியில் எடப்பாடி.. "அவரா" வேட்பாளர்.. 2 சிக்கலும் 3 சாய்ஸூம்.. ஓவர் கன்ஃபியூஷன் போல
- Technology
பதான் திரைப்படத்தில் புதிய ஸ்மார்ட்போனுடன் வரும் ஹர்திக் பாண்டியா! ட்விட்டரில் வெளியான புகைப்படம்!
- Lifestyle
நீங்க 5,14 மற்றும் 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்களா? அப்ப உங்களைப் பற்றிய இந்த விஷயங்களை அவசியம் தெரிஞ்சிக்கோங்க!
- Finance
அடடே.. இன்று தங்கம் விலை எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா.. சர்ப்ரைஸ் தான்!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Automobiles
இன்னும் என்ன யோசனை... ரொம்ப நாளாக எதிர்பார்த்த டீசல் டொயோட்டாவிற்கான புக்கிங் மீண்டும் தொடங்கியிருக்கு!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
கோட் சூட்டில் சும்மா ’வாரிசு’ விஜய் மெர்சல் கிளப்புறாரே.. இதுதான் ரியல் பர்த்டே ட்ரீட்!
சென்னை: நடிகர் விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22ம் தேதி கோலாகலமாக கொண்டாட உள்ள நிலையில், தனது ரசிகர்களுக்கு அட்டகாசமான பிறந்தநாள் பரிசை கொடுத்துள்ளார் விஜய்.
Recommended Video
கோட் சூட்டில் பக்கா மாஸாக நடிக விஜய் போஸ் கொடுத்துள்ள ஃபர்ஸ்ட் லுக்குடன் 'வாரிசு' என்பது தான் படத்தின் டைட்டில் என்பதும் வெளியாகி உள்ளது.
இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தான் ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவையும் தற்போது ஆட்சி செய்து வருகிறது.
என் கணவரை பிரியும் போது நான் போட்ட ஒரே கண்டிஷன் இதுதான்.. மனம் திறந்த பிரகாஷ்ராஜ் மாஜி மனைவி!

வாரிசு டைட்டில் எப்படி இருக்கு
நடிகர் விஜய்யின் படத்தின் காட்சிகளே கசிந்து விடும் நிலையில், டைட்டில் எல்லாம் சஸ்பென்ஸாக வைத்திருக்க முடியுமா என்ன? ஒரு வாரத்துக்கு முன்னதாகவே இதுதான் டைட்டில் என்பது லீக் ஆகி விட்டது. ஆனாலும், அதிகாரப்பூர்வமாக ஃபர்ஸ்ட் லுக்குடன் டைட்டிலை பார்க்கும் போது வேறலெவலில் இருக்கே என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதிலும், கோட் சூட்டில், ட்ரிம் தாடியுடன் சர்கார் படத்திற்கு பிறகு மீண்டும் இப்படியொரு தோற்றத்தில் நடிகர் விஜய் நடிக்கப் போவதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சோஷியல் மீடியாவில் விஜய் ஆட்சி
நடிகர் விஜய்யின் 48வது பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் அதனை முன்னிட்டு தற்போது வெளியாகி உள்ள வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த ரசிகர்கள் ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவையும் தெறிக்க விட்டு வருகின்றனர். சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர். விஜய் போட்டுள்ள ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட லைக்குகள் மற்றும் ரீட்வீட்டுகள் போடப்பட்டு விரைவில் ஒரு பெரிய சாதனையை படைக்க விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக வேலை பார்த்து வருகின்றனர்.

ரசிகர்கள் ஹேப்பி
48 வயதிலும் செம யங் லுக்கில் நடிகர் விஜய்யின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வருவதை பார்த்து மெய் சிலிர்ந்து போயுள்ளனர் விஜய் ரசிகர்கள். தி பாஸ் ரிட்டர்ன்ஸ் என்கிற சப் லைனும் மிரட்டி எடுத்து வருகிறது. இந்த ட்ரீட் போதும் அண்ணா என விஜய் ரசிகர்கள் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட தயாராகி விட்டனர். இன்று இரவு 12.01க்கு வாரிசு படத்தின் செகண்ட் லுக்கும் வர உள்ளது.

சிங்கம் சிங்கிளா தான் வரும்
வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, மெஹ்ரின் பிர்சடா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, யோகி பாபு, சங்கீதா என ஏகப்பட்ட நடிகர்கள் இருந்தாலும், வழக்கம் போல ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் விஜய்யின் தரிசன தான் கிடைக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களை வம்சியும் கைவிடவில்லை. சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என்பது போல அட்டகாசபடுத்தி உள்ளார்.