»   »  ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி...ஓபனிங்கில் தெறிக்க விடப்போகும் விஜய்

ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி...ஓபனிங்கில் தெறிக்க விடப்போகும் விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி இதுதான் தெறி படத்தின் ஓபனிங் பாடல் வரிகள் என்று தெரிவித்து இருக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், மகேந்திரன் மற்றும் பலர் நடித்து வரும் படம் தெறி. கலைப்புலி தாணு தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.


இந்நிலையில் படத்தின் ஓபனிங் பாடல் வரிகளை வெளியிட்டு விஜய் ரசிகர்கள் மத்தியில் புண்ணியத்தை கட்டிக் கொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.


தெறி

தெறி

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தெறி படம் அவரது 59 வது படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சமந்தா, எமி ஜாக்சன், பிரபு, ராதிகா சரத்குமார், மகேந்திரன், சந்தானம், ராஜேந்திரன், சுனைனா மற்றும் மீனாவின் மகள் நைனிகா ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு சமீபத்தில் வெளியாகி விஜய் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.


ஜித்து ஜில்லாடி

இந்நிலையில் இப்படத்தின் ஓபனிங் பாடல் வரிகளை படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டு இருக்கிறார். 'ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி' என்று தொடங்கும் அந்தப் பாடலை மூத்த இசையமைப்பாளரான தேவா பாடியிருக்கிறார். இந்தப் பாடலிற்கு தொடர்ந்து இடைவிடாது 40 விநாடிகள் விஜய் நடனமாடி இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.


முன்னதாக

முன்னதாக

முன்னதாக இதே போன்று அழகிய தமிழ்மகன் படத்தில் இடம்பெற்ற 'எல்லாப்புகழும்' பாடலிற்கு 25 நொடிகளும், சுறா படத்தில் இடம்பெற்ற 'நான் நடந்தால்' பாடலிற்கு 35 நொடிகளும் விஜய் நடனமாடி இருக்கிறார். மேலும் சமீபத்தில் வெளியான புலி படத்தில் இடம்பெற்ற 'புலி புலி' பாடலிற்கு 30 நொடிகள் விஜய் நடனமாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.


பிரியமுடன்

பிரியமுடன்

ஏற்கனவே பிரியமுடன் படத்தில் இடம்பெற்ற 'வொய்ட் லெக்கான் கோழி ஒண்ணு கூவுது' பாடல் விஜய் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தேவா இசைக்கு விஜய் நடனமாடிய இந்தப் பாடல் இன்றளவும் விஜய் ரசிகர்களின் மனங்கவர்ந்த பாடல்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இதே போன்று தற்போது தேவா குரலில் உருவாகி இருக்கும் 'ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி' பாடலும் விஜய்யின் நடனமும், விஜய் ரசிகர்களிடம் நல்லதொரு வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


English summary
Music Composer G.V.Prakash Kumar Wrote on Twitter "#ulagalocaltharaticket #GV50 intro song of ilayathalapathy is #jithujilladi .. Jithu jilladi mittaa killadi . Sung by deva lyrics by rokesh".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil