»   »  விஜய் அங்கிளுடன் எதிர்காலத்தில் நைனிகா ஜோடியாக நடிக்கலாம்.. "ரஜினி அங்கிள்" புகழ் மீனா

விஜய் அங்கிளுடன் எதிர்காலத்தில் நைனிகா ஜோடியாக நடிக்கலாம்.. "ரஜினி அங்கிள்" புகழ் மீனா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்க்கு ஜோடியாக வருங்காலத்தில் நைனிகா நடிக்கலாம் என நடிகை மீனா தெரிவித்திருக்கிறார்.

நேற்று நடைபெற்ற தெறி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அட்லீ, எமி ஜாக்சன், மீனா, நைனிகா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


படத்தின் நாயகன் விஜய், சமந்தா, தயாரிப்பாளர் தாணு ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.


தெறி

தெறி

விஜய்யின் 59 வது படமான 'தெறி' நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இதில் விஜய்யுடன் இணைந்து சமந்தா, எமி ஜாக்சன், நைனிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார். பிரமாண்ட கட்-அவுட்டுகள் போன்ற பல்வேறு விஷயங்களுடன் இப்படத்தை வரவேற்க ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.


பத்திரிகையாளர் சந்திப்பு

பத்திரிகையாளர் சந்திப்பு

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இயக்குநர் அட்லீ, எமி ஜாக்சன், மீனா, நைனிகா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். படத்தின் நாயகன் விஜய், சமந்தா, தயாரிப்பாளர் தாணு ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.


பட்டும் படாமல்

பட்டும் படாமல்

விழாவில் பேசிய இயக்குநர் அட்லீ சமந்தா வராத காரணத்தை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். படத்தை இயக்கி சென்சார் சான்றிதழ் வாங்கியதோடு என்னுடைய வேலை முடிந்தது. இன்னும் சில தியேட்டர்களில் முன்பதிவு தொடங்கப்படவில்லை என்பதற்கான காரணத்தை நீங்கள் தயாரிப்பாளரிடம் தான் கேட்க வேண்டும் என பத்திரிக்கையாளர்களின் நேரடிக் கேள்விகளுக்கு பதிலளித்தார். எந்தக் கேள்விக்கும் அட்லீ நேரடியாகப் பதில் கூறவில்லை.


நைனிகா

நைனிகா

விழாவில் நடிகை மீனா 'வருங்காலத்தில் விஜய்க்கு ஜோடியாக நைனிகா நடிக்கலாம் அதுகுறித்து எனக்குத் தெரியவில்லை' என்று கூறினார். இந்தப் படத்தில் விஜய்யின் மகளாக நைனிகா நடித்திருக்கிறார். விஜய்க்கு இணையாக நைனிகா பாத்திரம் வலுவானது என்பதால், ஹீரோயின்களை விட நைனிகாவை படக்குழு அதிகம் விளம்பரப்படுத்தி வருகிறது.


பிளாஷ்பேக் திரும்புமா?

பிளாஷ்பேக் திரும்புமா?

ரஜினி அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க? என்று குழந்தையாக ரஜினியிடம் கேட்ட மீனா, பிற்காலத்தில் முத்து, எஜமான், வீரா படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதேபோல நைனிகாவும் விஜய்க்கு ஜோடியாக நடிப்பாரா? அப்படி நடித்தாலும் விஜய் அதனை ஏற்றுக் கொள்வாரா? போன்ற கேள்விகளுக்கான விடை நம்மிடம் இல்லை. எனினும் பொறுத்திருந்து பார்க்கலாம்.


English summary
Vijay's Theri Press Meet held on Yesterday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil