»   »  கேரளாவை தொடர்ந்து விஜய் கோட்டையாக மாறிய கர்நாடகா! சிறு நகரங்களிலும் 'தெறி' செம ஹிட்

கேரளாவை தொடர்ந்து விஜய் கோட்டையாக மாறிய கர்நாடகா! சிறு நகரங்களிலும் 'தெறி' செம ஹிட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: 'தெறி' திரைப்படம் தமிழகத்தில் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளதை போலவே, கர்நாடகாவிலும் சிறு நகரங்களில் கூட திரையிட்ட இடங்களில் எல்லாம் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது.

அட்லி இயக்கத்தில், விஜய், சமந்தா, எமி ஜாக்ஷன் உள்ளிட்டோர் நடித்த 'தெறி' திரைப்படம், தமிழ் புத்தாண்டு தினத்தன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆனது.


கர்நாடகாவில் பெங்களூர் உட்பட பல நகரங்களில் மொத்தமாக 41 திரையரங்குகளில் 'தெறி' ரிலீசாகி கன்னட திரையுலகினரையே ஆச்சரியப்பட வைத்துள்ளது.


தெறிக்கவிடும் தெறி

தெறிக்கவிடும் தெறி

பெங்களூர் நகரை தவிர்த்து தமிழர்கள் எங்கெல்லாம் கணிசமாக வாழ்கிறார்களோ அந்த நகரங்களிலுள்ள திரையரங்குகளில் எல்லாம் 'தெறி' திரையிடப்பட்டுள்ளது. அங்கெல்லாம் வெற்றிகரமாகவும் ஓடி வருகிறது.


குட்டி நகரம்

குட்டி நகரம்

உதாரணத்திற்கு, பெங்களூரிலிருந்து சுமார் 300 கி.மீ தொலைவில், ஷிமோகா மாவட்டத்திலுள்ள பத்ராவதி நகராட்சியிலுள்ள, வாகிஷ் என்ற திரையரங்கில் கூட 'தெறி' வெற்றிகரமாக ஓடுவது என்பது விஜய்க்கு கிடைத்துள்ள வரவேற்புக்கு ஒரு சான்று.


கன்னடர்கள் கோட்டையிலும்

கன்னடர்கள் கோட்டையிலும்

இதேபோன்று மற்றொரு குட்டிநகரமான சிக்மகளூரில் ஸ்ரீலேகா என்ற தியேட்டரிலும், ஷிமோகாவில் ஹெச்.பி.சி என்ற திரையரங்கிலும் மைசூரில் சங்கம் என்ற திரையரங்கிலும், கன்னடர்கள் கணிசமாக வாழும் மண்டியாவில் குருஸ்ரீ, ஒக்கலிக ஜாதியினரின் கோட்டையான ஹாசன் நகரிலுள்ள பானு ஆகிய திரையரங்கங்களிலும் 'தெறி' தெறிக்கவிட்டுக்கொண்டுள்ளது.


மைசூர், கோலார்

மைசூர், கோலார்

ஹாசனில் சமீபகாலமாக அஜித், தனுஷ் உள்ளிட்டோர் நடித்த தமிழ் திரைப்படங்கள் திரையிடுவது அதிகரித்துள்ளது. தெறியும் விதிவிலக்கு இல்லை. இதுதவிர மைசூரில் டிஆர்சி, சங்கம் ஆகிய இரு தியேட்டர்களிலும், கோலர் தங்க வயரில் லட்சுமி என்ற தியேட்டரிலும் 'தெறி' திரையிடப்பட்டுள்ளது.


கன்னட ரசிகர்கள் சப்போர்ட்

கன்னட ரசிகர்கள் சப்போர்ட்

கன்னட ரசிகர்கள், ரஜினி, அஜித், விஜய் போன்ற மாஸ் ஹீரோ திரைப்படங்களை மொழி மாற்றமின்றி அப்படியே தமிழில் பார்க்கும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டுள்ளனர். தமிழ் ரசிகர்களோடு, இந்த கன்னட ரசிகர்களும் இணைந்துள்ளதுதான் 'தெறி' இத்தனை திரையரங்குகளில் ரிலீசாக காரணம்.


கேரளா

கேரளா

கேரள மாநிலம், நடிகர் விஜய் படங்களுக்கு பெரிய மார்க்கெட்டை பெற்றுத்தந்து கொண்டுள்ளது. இதனால் கேரளா விஜயின் கோட்டை என்று கூறப்பட்டு வந்தது. 'தெறி' படத்தில்கூட விஜய் மலையாள பின்னணி காட்சிகளில் நடிக்க அது ஒரு காரணம்.


கோட்டை

கோட்டை

'தெறி' படத்திற்கு கர்நாடகாவில் கிடைத்துள்ள வரவேற்பை பார்க்கும்போது, கர்நாடகாவும் விஜயின் கோட்டையாக மாறிவிட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது. உதாரணத்திற்கு பெங்களூரில் இருந்து ஒருவர் காரை எடுத்துக்கொண்டு, கர்நாடகாவின் உட்பகுதியில் பயணித்தால், சாலையோரத்தில் 10 கி.மீக்கு ஒரு 'தெறி' திரையிடும் தியேட்டர் பற்றிய விளம்பர போஸ்டரையாவது பார்த்துவிட முடிகிறதாம்.


English summary
Theri receiving huge support in Karnataka. Vijay becomes mass hero in Karnataka too.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil