»   »  துப்பாக்கி, கத்தியைத் தொடர்ந்து 'தெறி' ரீமேக்கில் நடிக்கும் அக்‌ஷய் குமார்

துப்பாக்கி, கத்தியைத் தொடர்ந்து 'தெறி' ரீமேக்கில் நடிக்கும் அக்‌ஷய் குமார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தி நடிகர் அக்ஷய்குமார் 'தெறி' படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியின் முன்னணி மற்றும் வெற்றி நாயகனாக வலம்வருபவர் அக்ஷய்குமார். தற்போது ஷங்கரின் '2.ஓ' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து வருகிறார்.


Vijay's Theri Remade in Hindi

இந்நிலையில் 'தெறி' படத்தின் இந்தி ரீமேக்கில் அக்ஷய்குமார் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 'துப்பாக்கி' படத்தின் இந்தி ரீமேக்கில் அக்ஷய்குமார் நடித்தார்.


'ஹாலிடே' என்ற பெயருடன் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து 'கத்தி' படத்தின் இந்தி ரீமேக்கிலும் இவர் நடிக்கவிருக்கிறார்.


3 வது முறையாக விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'தெறி' இந்தி ரீமேக்கில் நடிப்பதற்கும், இவர் ஆர்வம் காட்டி வருகிறாராம்.


இது தொடர்பாக தெறி தயாரிப்பாளருடன் பேசி வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
Sources Said Vijay's Theri are Currently being Remade in Hindi Language.The Official Announcement of this Film Expected Soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil