»   »  எவ்வளவு சோதனை வந்தாலும், 'தெறி'யோட சாதனையை தடுக்க முடியலையே!

எவ்வளவு சோதனை வந்தாலும், 'தெறி'யோட சாதனையை தடுக்க முடியலையே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தெறி டீசர யூ டியுப்ல காணோம், இது அந்தப் படத்தோட காப்பி மாதிரியே இருக்கு, சின்னக் குழந்தைங்க ரைம்ஸ் மாதிரி இருக்கு.

எவ்வளவு கமெண்ட்ஸ், எத்தனை டிஸ்லைக்ஸ் எல்லாமும் மொத்தமா சேர்ந்து கூட தெறியோட சாதனைகளை தடுக்க முடியலயே என்று ஆச்சரியப்பட்டு கிடக்கிறது மொத்தக் கோலிவுட்டும்.


அதே நேரம் யூ டியூபில் டீசர் காணாமல் போனாலும் கூட தெறியை சாதனை படைக்க வைத்து, மீண்டும் ஒருமுறை தங்கள் மாஸ் பலத்தை விஜய் ரசிகர்கள் காட்டியிருக்கின்றனர்.


தெறி

தெறி

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியான தெறி டீசர் தென்னிந்திய மற்றும் இந்தியளவில் இதுவரை வெளியான படங்களின் அனைத்து வரலாறுகளையும் முறியடித்து சாதனை படைத்துள்ளது.


குறைந்த நேரத்தில்

குறைந்த நேரத்தில்

குறைந்த நேரத்தில் (டீசர் வெளியான முதல் 12 மணி நேரங்களில் 10 லட்சம் பார்வைகள்) அதிகமான பார்வைகளை பெற்ற முதல் தென்னிந்திய டீசர் என்ற பெருமையை தெறி டீசர் பெற்றிருக்கிறது.இதன் மூலம் ஐ படத்தின் வரலாற்றை தெறி முறியடித்திருக்கிறது.
22 லட்சம்

22 லட்சம்

இதே போல முதல்நாளில் 22 லட்சம் பார்வையிடல்களை பெற்றதன் மூலம் முதல் நாளில் அதிக பார்வை+லைக்குகள்(1,50,௦௦௦) பெற்ற முதல் தென்னிந்திய டீசர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறது. இதற்கு முன்னர் ஐ படத்தை ஒரே நாளில் 15 லட்சம் பார்த்து ரசித்தது குறிப்பிடத்தக்கது.


30 மணி நேரத்தில்

30 மணி நேரத்தில்

மேலும் 30 மணி நேரத்தில் 30 (3,166,927) லட்சம் பார்வைகளைப் பெற்ற முதல் தென்னிந்திய டீசர் என்ற சாதனையையும் இது படைத்திருக்கிறது. அதே போல அதிக லைக்குகளையும் (1,82,070) பெற்று வேதாளம்(1,41,000) படத்தின் லைக் சாதனையையும் தெறி முறியடித்திருக்கிறது.


இந்தியளவில்

இந்தியளவில்

வேதாளம் லைக்குகளை முறியடித்ததன் மூலம் இந்தியளவில் அதிக லைக்குகளைப் பெற்ற முதல் டீசர் என்ற சாதனையும் தற்போது தெறி வசம் வந்திருக்கிறது.


கொண்டாடும் ரசிகர்கள்

தற்போது இந்த சாதனையை #MassiveTHERITeaserHits3MViews என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கொண்டாடுகின்றனர் என்பதை விட படத்தின் பெயருக்கு ஏற்ற மாதிரி 'தெறி'க்க விடுகிறார்கள் என்பதே உண்மை.


English summary
Vijay's Theri Teaser was released on the midnight of February 5. The teaser, which is storming the social networking websites, crossed More than 30 lakhs views and 1,82,070 Likes within 30 Hrs of its release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil