அஜித் சொல்றது பொய்… நிரூபிக்க காத்திருக்கும் விஜய்… துணிவுக்கு பதிலடி கொடுக்கப் போகும் வாரிசு!

சென்னை: விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை வெளியாகவுள்ளது.

இந்நிலையில், அஜித் சமீபத்தில் கூறியிருந்த ஒரு கருத்தை பொய் என விஜய் நிரூபிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கல் ரேஸில் விஜய் - அஜித்

பொங்கல் ரேஸில் விஜய் - அஜித்

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் வாரிசு படத்தில் விஜய் நடித்து வருகிறார். வம்ஷி பைடிபள்ளி இயக்கும் இந்தப் படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகிறது. அதேபோல், அஜித்தின் துணிவு படமும் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் - அஜித்தின் படங்கள் நேருக்கு நேர் மோதவுள்ளதால், கோலிவுட்டே பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில், வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை வெளியாகிறது. இதனால், விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

அஜித் ஸ்டேட்மெண்ட்

அஜித் ஸ்டேட்மெண்ட்

அதேபோல் துணிவு படத்தின் முதல் பாடலும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில்லா சில்லா என்ற துணிவு படத்தின் முதல் பாடலை அனிருத் பாடியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் துணிவு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் அஜித் கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால், உடனே அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக, அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா டிவீட் செய்திருந்தார். அதில், "ஒரு நல்ல படம் தன்னைத்தானே ப்ரோமோஷன் செய்துகொள்ளும்" என குறிப்பிட்டு அஜித்தின் பெயரோடு ஷேர் செய்திருந்தார்.

விஜய்யின் முடிவு

விஜய்யின் முடிவு

விஜய்யும் அஜித்தைப் போல தனது படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது கிடையாது. ஆனால், ஆடியோ ரிலீஸ், ட்ரெய்லர் வெளியீடு போன்ற நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்பது வழக்கம். இந்நிலையில், வாரிசு படத்தின் ஆடியோ, ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியை துபாயில் நடத்த விஜய் முடிவு செய்துள்ளாராம். அதிலும் குறிப்பாக வாரிசு ட்ரெய்லர் புர்ஜ் கலீபா கட்டடத்தில் திரையிடப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக விஜய் நேரடியாக துபாய் செல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ட்ரெய்லரிலும் மோதல்

ட்ரெய்லரிலும் மோதல்

வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியான பின்னரே அஜித்தின் துணிவு படத்தில் இருந்து முதல் பாடல் வெளியாகவுள்ளது. அதேநேரம் துணிவு படத்தின் ட்ரெய்லரை டிசம்பர் 22ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதனால், துணிவு ட்ரெய்லர் ரிலீசாகி இரண்டு நாட்களுக்குப் பின்னரே வாரிசு ட்ரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அதன்படி டிசம்பர் 24ம் தேதி வாரிசு ட்ரெய்லர் துபாயில் உள்ள புர்ஜ் கலீபா கட்டடத்தில் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X