டிசம்பர் 24ல் வாரிசு இசை மழை… ரசிகர்களுக்காக விஜய் துணிந்து எடுத்த அசத்தல் முடிவு!

சென்னை: விஜய் நடித்துள்ள வாரிசு படத்தில் இருந்து முதல் பாடலான ரஞ்சிதமே ரஞ்சிதமே கடந்த வாரம் வெளியானது.

ரஞ்சிதமே பாடலை தொடர்ந்து வாரிசு படத்தின் செகண்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

விஜய்யின் வாரிசு

விஜய்யின் வாரிசு

பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்துள்ள வாரிசு பொங்கலுக்கு ரிலீஸாகிறது. வாரிசு படத்துடன் அஜித்தின் துணிவும் பொங்கல் ரேஸில் களமிறங்குவதால், இப்போது இருந்தே பரபரப்பான சூழல் காணப்படுகிறது. அதனால், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், அடுத்தடுத்து அப்டேட்களை வெளியிட்டு அசத்தி வருகிறது வாரிசு டீம். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள வாரிசு, விஜய் கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என இயக்குநர் வம்ஷி பைடிபள்ளி கூறியுள்ளார்.

வாரிசு ஆடியோ ரிலீஸ்

வாரிசு ஆடியோ ரிலீஸ்

விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, எஸ்ஜே சூர்யா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பூ, யோகிபாபு உள்ளிட்ட ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' பாடல் கடந்த வாரம் வெளியானது. தமன் இசையில் விஜய் பாடியுள்ள இந்தப் பாடலுக்கு விஜய் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது சிங்கிளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சூப்பரான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த விஜய் முடிவு செய்துள்ளாராம்.

டிசம்பரில் ஆடியோ ரிலீஸ்

டிசம்பரில் ஆடியோ ரிலீஸ்

ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் வாரிசு ஆடியோ ரிலீஸ் இருக்க வேண்டும் என விஜய் கண்டிஷன் போட்டுள்ளாராம். அதனால், டிசம்பர் 24ம் தேதி, சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாம். பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், விஜய், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட வாரிசு படக்குழுவினருடன், மேலும் பல சிறப்பு விருந்தினர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக சொல்லப்படுகிறது.

ப்ரோமோஷன் தான் காப்பாத்தும்

ப்ரோமோஷன் தான் காப்பாத்தும்

விக்ரம், பொன்னியின் செல்வன் படங்களின் ஆடியோ ரிலீஸ் நேரு விளையாட்டு அரங்கத்தில் செம்ம மாஸாக நடைபெற்றது. அதேபோல், வாரிசு படத்தின் ஆடியோ லான்ச்சும் இருந்தால், ரசிகர்கள் முன்னிலையில் சூப்பரான ப்ரோமோஷன் கிடைக்கும் என வாரிசு டீம் ப்ளான் செய்துள்ளது. விஜய்யும் ரசிகர்களுக்காக இந்த ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த துணிந்து முடிவு செய்துள்ளாராம். பொங்கலுக்கு அஜித்தின் துணிவு படமும், தெலுங்கில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா ஆகியோரின் படங்களும் வெளியாவதால் கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவில் ப்ரோமோஷன் தாறுமாறாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், விஜய் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X