வாரிசுக்கு ரேட்டிங்குடன் விமர்சனம் சொன்ன அந்த நபர்... இந்த ரிசல்ட்ட யாருமே எதிர்பார்க்கலையே!

சென்னை: விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 11ம் தேதி ரிலீஸாகிறது.

இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் வாரிசு படத்தின் புதிய போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது.

இந்நிலையில் வாரிசுடன் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் போட்டியில் களமிறங்குகிறது.

இரண்டு திரைப்படங்களுக்குமே ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படும் நிலையில், வாரிசு படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி வைரலாகி வருகிறது.

 இரு தின்ங்களில் வாரிசு

இரு தின்ங்களில் வாரிசு

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக வரும் 11ம் தேதி ரிலீஸாகிறது. முன்னதாக இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருந்தது. விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகிபாபு, ஷாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள வாரிசு ஃபேமிலி என்டர்டெயின்மெண்ட்டாக உருவாகியுள்ளது. இந்நிலையில், வாரிசு படத்தின் புதிய போஸ்டரையும் படக்குழு நேற்று வெளியிட்டிருந்தது.

 வாரிசு முதல் விமர்சனம்

வாரிசு முதல் விமர்சனம்

தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள வாரிசு படத்தை வம்ஷி பைடிபள்ளி இயக்கியுள்ளார். வாரிசு ட்ரெய்லர் மீது சில விமர்சனங்கள் எழுந்தபோதும் படம் நிச்சயம் ஹிட் அடிக்கும் என்றே எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் தான் வாரிசு படத்தின் முதல் விமர்சனம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. வாரிசு படத்தை சென்சாரில் பார்த்த ஒருவரிடம் இருந்து தான் இந்த விமர்சனம் வந்துள்ளது. அதன்படி, வாரிசு திரைப்படத்தில் விஜய்யின் நடிப்பு மிரட்டலாக உள்ளதாக கூற்யுள்ளார்.

 பழைய கதை தான்

பழைய கதை தான்

மேலும், எமோஷனல் காட்சிகளில் விஜ சிறப்பாக நடித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் படத்தின் கதை ஒன்றும் புதிதல்ல, ஆனாலும் திரைக்கதை விறுவிறுப்பாகவே நகர்கிறது. ராஷ்மிகா மந்தனா க்யூட்டாக இருப்பதாகவும், ரசிகர்களுக்கு நல்ல விருந்து தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அம்மா, அப்பா இருவருடனும் மகனான விஜய்யின் உறவை பேசும் படமாக இது உருவாகியுள்ளது. குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அற்புதமாக இருப்பதாக அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

 இதுதான் வாரிசு ரேட்டிங்

இதுதான் வாரிசு ரேட்டிங்

அதேபோல் படத்தின் முதல் பாதியை இன்னும் குறைத்து இருக்கலாம். அதுதான் குறையாக அமைய வாய்ப்புள்ளது. துணை நடிகர், நடிகைகள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். மொத்தத்தில் வாரிசு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் தான் என குறிப்பிட்டுள்ளதோடு, 3.5 ரேட்டிங் கொடுக்கலாம் என்றுள்ளார். வாரிசு படத்தின் இந்த முதல் விமர்சனம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் விஜய் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர். வரும் 11ம் தேதி விஜய்யின் வாரிசு படத்துடன் அஜித்தின் துணிவும் ரிலீஸாகவுள்ளதால் கோலிவுட்டே பரபரப்பாக காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X