வாரிசு ரிலீஸுக்கு முன்பே 300 கோடி பிசினஸ்…? வசூல் மாஸ்டர் என நிரூபித்த விஜய்!

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகரகளுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.

ஆனால், அதேநேரம் வாரிசு படத்தின் ப்ரி-ரிலீஸ் பிசினஸ் கோலிவுட்டில் மிகப் பெரிய சாதனையை படைத்துள்ளது. .

தளபதியின் வாரிசு

தளபதியின் வாரிசு

விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், எஸ்ஜே சூர்யா, யோகிபாபு உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கும் இந்தப் படத்தை வம்ஷி பைடிபள்ளி இயக்கி வருகிறார். வாரிசு திரைப்படம் குடும்பப் பின்னணியில் ஆக்சன், செண்டிமெண்ட், காதல், ரொமான்ஸ் என கமர்சியலாக உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் வெளியானதும் விஜய்யை மீண்டும் ஃபேமிலி ஆடியன்ஸ் கொண்டாடும் அளவிற்கு தரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ப்ரீ ரிலீஸ் பிசினஸ்

ப்ரீ ரிலீஸ் பிசினஸ்

வாரிசு பொங்கலுக்கு வெளியாகும் என்பதை படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. விரைவில் ரிலீஸ் தேதியையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், இப்போதே வாரிசு படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் அனைத்தும் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 300 கோடி ரூபாய்க்கு ப்ரீ ரிலீஸ் பிசினஸ் நடந்துள்ளதாக வெளியான தகவல், கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது. இதன்மூலம் விஜய் மீண்டும் தன்னை பாக்ஸ் ஆபிஸ் மாஸ்டர் என நிரூபித்துள்ளார்.

வாரிசு ஓடிடி ரைட்ஸ்

வாரிசு ஓடிடி ரைட்ஸ்

இப்போதெல்லாம் படங்களின் ஓடிடி உரிமை மிகப் பெரிய பிசினஸாகவும், தயாரிப்பாளர்களுக்கு மினிமம் கியாரண்டி லாபத்தையும் கொடுத்து வருகிறது. படங்கள் வெளியாகும் முன்னரே ஓடிடி ரைட்ஸ் விலை போவது வழக்கமாகி விட்டது. இந்நிலையில், வாரிசு படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் 60 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், சாட்டிலைட் உரிமையை சன் டிவி 50 கோடிக்கு பேசி முடித்துவிட்டதாம். ஓடிடி ப்ளஸ் சாட்டிலைட் இந்த இரண்டு உரிமைகளில் மட்டுமே வாரிசு படம் 110 கோடி வசூல் செய்துள்ளது.

கெத்து காட்டும் விஜய்

கெத்து காட்டும் விஜய்

அதேபோல், இந்தி டப்பிங் உரிமயை Goldmines movie நிறுவனம் 32 கோடி ரூபாய்க்கு வங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ஓவர்சீஸ் உரிமையை Phars Films நிறுவனம் 32 கோடி ரூபாய்க்கு விலை பேசி முடித்துள்ளதாகவும், ஆடியோ உரிமையை T-Series நிறுவனம் 10 கோடிக்கு வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ரிலீஸ்க்கான டீலிங்கும் நடைபெற்று வருகிறதாம். வாரிசு வெளியாகும் முன்பே 300 கோடி வசூலித்துள்ளது தயாரிப்பாளர் தில் ராஜூவுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X