விஜய்யின் வாரிசு ஓடிடி ரிலீஸ் அப்டேட்... அமேசான் ரசிகர்களுக்கு அசத்தல் சர்ப்ரைஸ்

சென்னை: விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த வாரிசு திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஷாம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 300 கோடியை நெருங்கியதாக சொல்லப்படுகிறது.

தொடர்ந்து 3வது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வாரிசு படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் கிடைத்துள்ளது.

 மாஸ் காட்டிய விஜய்யின் வாரிசு

மாஸ் காட்டிய விஜய்யின் வாரிசு

விஜய் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த மாதம் 11ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. தில் ராஜூ தயாரிப்பில் வம்ஷி பைடிபள்ளி இயக்கிய இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியானது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்துக்கு முதல் நாளில் இருந்தே நல்ல ஓப்பனிங் கிடைத்தது. முக்கியமாக அஜித்தின் துணிவு திரைப்படமும் அதேநாளில் வெளியானபோதும், வாரிசுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

 ஓடிடி ரிலீஸ் தேதி

ஓடிடி ரிலீஸ் தேதி

பேமிலி சென்டிமெண்டல் ஜானரில் கமர்சியலாக உருவான வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். விஜய்யின் ஸ்டைலிஷான மேனரிசம் அவரது பவர்ஃபுல்லான ஆக்டிங் தான் வாரிசு படத்தின் சக்சஸ் என சொல்லப்பட்டது. விஜய் தான் இந்தப் படத்தை மொத்தமாக தனது தோளில் தூக்கி சுமந்ததாக ரசிகர்களும் கூறி வந்தனர். இந்நிலையில் வாரிசு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து தற்போது தகவல் கிடைத்துள்ளது.

 அமேசான் பிரைமில் வாரிசு

அமேசான் பிரைமில் வாரிசு

வாரிசு திரைப்படம் உருவாகிக்கொண்டிருந்த போதே இதன் ஓடிடி உரிமயை அமேசான் பிரைம் கைப்பற்றியது. இதனால் அப்போதிருந்தே அமேசான் சந்தாதாரர்கள் வாரிசு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து காத்திருந்தனர். அதன்படி வாரிசு திரைப்படம் வரும் 22ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. திரையரங்கில் வெளியாகி 3 வாரங்கள் ஆகியும் ரசிகர்களின் வரவேற்புடன் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தற்போது ஓடிடி ரிலீஸ் பற்றியும் அப்டேட் வெளியாகியுள்ளது.

 பரபரக்கும் தளபதி 67

பரபரக்கும் தளபதி 67

இந்தாண்டு பொங்கல் பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் வாரிசு - அஜித்தின் துணிவு படங்களுக்கு இடையே கடும் போட்டி காணப்பட்டது. இதில் வாரிசு படத்தின் வசூல் இதுவரை மொத்தம் 300 கோடியை கடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் விஜய் நடிப்பில் அடுத்து உருவாகும் தளபதி 67 படத்தின் அப்டேட்டும் அடுத்தடுத்து வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. முக்கியமாக தளபதி 67 டைட்டில் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வாரிசு ஓடிடி உரிமை அமேசானிடம் சென்ற நிலையில், தளபதி 67 ஓடிடி ரைட்ஸை நெட்பிளிக்ஸ் கைப்பற்றி அதிரடி காட்டியுள்ளது. விஜய்யின் தளபதி 67 இந்தாண்டு தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X